How to share folders in Windows
போல்டர்களைப் பகிர்வது எப்படி?
ஒரு கணினி வலையமைப்பில் பைல்களைப் பரிமாறிக் கொள்ள (share) இலகுவான வழி முறையை விண்டோஸ் இயங்கு தளம் தருகிறது. போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கணினிக்குக் கணினி பைல்களை இலகுவாகப் பரிமாறிக் கொள்ளலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRvJ0dQTxi7eGJ7aN-CcJoMB0yW2Z2Ld9FqG3W-ktOT3n1e0Cq3nUnCpJ4tCHN5iMFbfQ3QNUfcAZCpeYfV2RIaw3I9yUtzVglIlWY8laYnfa_A8KSaVNZc4BnVuffk1TgYnL2MMcVRcQ/s320/mail.jpg)
Simple File sharing மூலம் போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்ள உரிய போல்டர் அல்லது ட்ரைவ் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Sharing and security தெரிவு செய்ய வேண்டும். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Sharing டேபின் கீழ் Network Sharing and security பகுதியில் Share this folder on the network என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்ல வேண்டும். இவ்வாறு பகிரப்படும் போல்டரை வலையமைப்பில் உள்ள அனைத்து கணிகளாலும் My Network Places விண்டோவைத் திறந்து அல்லது ரன் பொக்ஸில் \\ (கம்பியூட்டர் பெயர்) என டைப் செய்து வேறொரு கணினியிலிருந்து அந்த போல்டரை அணுக முடியும்.
அடுத்து Advanced File Sharing ஐ அணுகுவதற்கு முதலில் மேற் சொன்ன Simple File sharing என்பதை முடக்க வேண்டும். அதற்கு மை கம்பியூட்டர் விண்டோவைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு tools மெனுவில் Folder options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Use Simple File sharing என்பதைத் தெரிவு நிலையிலிருந்து நீக்கி விட்டு ஓகே சொல்லுங்கள்.
அடுத்து ஏற்கனவே சொன்னது போன்று தேவையான போல்டரின் மீது அல்லது ட்ரைவின் மீது ரைட் க்ளிக் செய்து Sharing and security தெரிவு செய்யுங்கள். இப்போது முன்னரை விட வித்தியசமான ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அங்கு பகிர வேண்டிய போல்டரை தெரிவு செய்து விட்டு Security டேப் மற்றும் Permissions பட்டனில் க்ளிக் செய்து வலையமைப்பில் உள்ள எந்தக் கணினிகளால் பைல்களை அணுகலாம், மாற்ற்ம் செய்யலாம் என்பன போன்ற பைல்களுக்கான பாதுகாப்பை வழங்கலாம்.
-அனூப்-