What is Cross-Over Cable?
Cross-Over Cable என்றால் என்ன?
கணினி வலயமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண முறுக்கிய கம்பிகளைக் (Twisted pair) கொண்ட கேபலானது எட்டு வயர்களை உள்ளே கொண்டிருக்கும்.. இந்த எட்டு வயர்களும் நான்கு சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் இரு முனைகளும் pin-to-pin முறையில் (Connector) கனெக்டரில் இணைக்கப்படும். அதாவது கேபலில் உள்ள வயர்களின் நிலைகள் இரண்டு முனைகளிலும் ஒத்திருக்கும்.
100 Mbps வேகம் கொண்ட Fast Ethernet நெட்வர்க் கார்டில் ஒரு சோடி வயரானது டேட்டாவை அனுப்புவதற்கும் (transmit) மற்றொரு சோடி வயர் டேட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கும் (receive) பயன்படுத்தப்படும். அதே வேளை மீதமிருக்கும் இரண்டு சோடி வயர்களும் பயன்படுத்தப் படாமலிருக்கும்.
இரு கணினிகளை இணைக்கும்போது pin-to-pin முறையில் வயர்களைக் அதற்குரிய கனெக்டரில் இணணக்கப்படின் அது செயற்படாது. ஏனெனில் இந்த முறையில் டேட்டாவை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு சோடி வயரானது அதன் அடுத்த முனையிலும் அதே போன்று டேட்டாவை அனுப்புவதற்கான சோடியுடனேயே இணைக்கப்படும். அதே போன்று டேட்டாவை பெற்றுக் கொள்ளும் ஒரு சோடி வயரானாது அடுத்த முனையிலும் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் சோடியுடனேயே இணைக்கப் படும். இதனையே பின்-டு-பின் கேபல் எனப்படும். இதன் காரணமாகா இரண்டு கணினிளும் ஒன்றோடொன்று தொடர்பாடலை மேற் கொள்வது சாத்தியப்படாது. .
பின்-டு-பின் கேபலை பயன்படுத்தி இரண்டு கணினிகளைக் இணைக்க வேண்டுமானால் இடையில் ஹப் (hub) அல்லது ஸ்விட்ச் (switch) போன்ற சாதனங்கள் தேவைப்படும். இந்த ஹப் அல்லது ஸ்விச், ஆனது இரண்டு வயர் சோடிகளையும் எதிரெதிர் முனைகளில் (cross) சந்திக்க வைக்கிறது. அதாவ்து ஒரு கணினியில் டேட்டாவை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு சோடி வயரானாது அடுத்த கணினியில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையுடனும் டேட்டாவைப் பெற்றும் கொள்ளும் முனையானது அடுத்த கணினியில் டேட்டாவை அனுப்பும் வயர் சோடியின் முனையுடனும் தொடுக்கப்படும். இதன் மூலம் இரு கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.
க்ரொஸ்-ஓவர் கேபல் இதற்கு நேர் மாற்றமானது. இங்கு டேட்டாவை அனுப்புவதத்குப் பயன்படும் ஒரு சோடி வயரானாது அடுத்த முனையில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையுடன் இணைக்கப்படும். அதே போன்றே அடுத்த சோடி வயரில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையானது டேட்டாவை அனுப்பும் வயரின் முனையுடன் கனெக்டரில் இணைக்கப்படும்.
க்ரொஸ்-ஒவர் கேபல் சாதராண நெட்வர்கின் கேபலிலிருந்து வேறுபடுவது அதிலுள்ள வயர்களினாலோ அல்லது அவற்றில் இனைக்கப்படும் கனெக்டரினாலோ அல்ல. அந்த வயர்களை ஒன்றோடொன்று இணைக்கப்படும் விதத்திலேயே அது மாறுபடுகிறது,