Difference between WEB MAIL and POP3 MAIL?

WEB MAIL /  POP3  MAIL என்ன வேறுபாடு?


மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இந்த இமெயில் சேவையானது இணைய தளம் (web server) சார்ந்தது,. இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தை நிறூபித்து (log in) எமக்கு வந்திருக்கும் இமெயிலைப் பார்ப்பதும் புதிதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெயில் எனப்படும்.வெப் மெயிலை / அனுப்பும் பெறும் செயற்பாடு வழமையான ஒரு இணைய பக்கத்திலேயே (web page) நடைபெறும். உங்களுக்குப் புதிதாக வந்திருக்கும் மெயில்களையும் முன்னர் வந்த மெயில்களையும் இணையத்தில் இணைவதன்மூலம் மட்டுமே (online) பார்வையிட முடியும்., இணைய இணைப்பின்றி (offline) மெயில்களைப் பார்வையிட முடியாது.

இலவச இமெயில் சேவை வழங்கும் நீறுவனங்கள் அனேகமாக வெப் மெயில் சேவையே வழங்குகின்றன. அதற்கு உதாரணமாக yahoo, Google போன்றவற்றைக் குறிப்பிடலாம் அனேகர் தங்கள் இமெயில் தொடர்பாடலுக்கு இந்த வெப் மெயிலையே பயன் படுத்துகின்றனர்மாறாக எமது இமெயில் கணக்கை நிர்வகிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் மூலம் மெயில் சேர்வரை அணுகி செய்திகளை அனுப்புவதும் பெறுவதும் பொப் மெயில் எனப்படும். Post Office Protocol என்பதன் சுருக்கமே POP. இது ஒரு தொடர்பாடல் (protocol) விதி முறையாகும். அதாவது இமெயில் ப்ரோக்ரம் அல்லது பொப் களையண்டுக்கும் (POP Client) மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவன சேர்வர் கணினிக்கும் (POP Server) இடையிலான ஒரு தொடர்பாடல் மொழி எனலாம்.

POP3 எனபதில் 3 என்பது அதன் பதிப்பிலக்கத்தைக் (version) குறிக்கிறது. தற்போது பயன் பாட்டிலுள்ள POP3 விதிமுறை பயன் பாட்டுக்கு வருவதற்கு முன்னர் அது சில மாற்றங்களுக்குள்ளானது, அதன் பிறகே POP3 விதி முறை நிர்ணயிக்கப்படுகிறது.

பொப் மெயிலில் இமெயில் அனுப்ப பெற உதவும் மென்பொருளை இமெயில் க்ளையன்ட் (e-mail client அல்லது POP client) எனப்படுகிறது. Outlook, Outlook Express, Eudora, Thunderbird என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.இமெயில் க்ளையன்ட் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு இமெயில் கணக்கு மட்டுமன்றி ஒன்றிற்கு மேற்பட்ட இமெயில் கணக்குகளையும் நிர்வகிக்க முடியும். அதன் மூலம் எமது அனைத்து இமெயில் கணக்குகளுக்கும் வந்து சேரும் இமெயில்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும். அத்தோடு மின்னஞ்சல்களை எமது கணினிக்கு டவுன்லோட் செய்து விட்டு நாம் விரும்பிய நேரத்தில் படிக்க முடிவதுடன் அனுப்புகின்ற மெயிலை அழகாக format செய்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் இணையத்தில் இணைந்திருக்கும் நேரத்தையும் குறைத் திடலாம். இது போன்ற பல வசதிகளைப் பொப் மெயில் தருகிறது.

மெயில்களை அனுப்புவதற்கென மற்றுமொரு ப்ரொட்டோகோல் பயன்படுகிறது., அதனை SMTP (Simple Mail Transfer Protocol) எனப்படும்.. மெயிலை அனுப்பும் SMTP க்லையண்டுக்கும் மெயிலை அனுப்பும் SMTP சேர்வருக்கும் இடையிலான தொடர்பாடல் விதிமுறைகளைக் இது கொண்டுள்ளது பொதுவாக இரண்டு ப்ரொட்டகோல்களிலும் SMTP (server) சேர்வர் ஆகவும் POP3 சேர்வர் ஆகவும் ஒரே கணினியே தொழிற்படுகிறது. , ஒரு பொப் க்ணக்கை உருவாக்குவதற்கு இமெயில்களை சேமித்து வைக்கும் சேர்வர் கணினியின் (POP3 சேர்வர்) பெயர், மெயில்களை அனுப்ப பெற உதவு சேர்வர் கணினியின் பெயர் (SMTP சேர்வர்) மெயில் சேர்வர் நிறுவனத்தால் உங்கள் கணக்கிற்கென வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் என்பன அவசியம்

பொப் மெயில் போன்று மற்றுமொரு இமெயில் சேவையே IMAP (Internet Message Access Protocol) எனப்படுகிறது. இது பொப் மெயிலை விட அதிக வசதியைத் தருகிறது. இதனையும் பொப் மெயில்களை நிர்வகிக்கும் ப்ரோக்ரம் கொண்டே நிர்வகிக்கலாம். இது எமக்கு வந்து சேர்ந்திருக்கும் மெயில்களை அனைத்தையும் நமது கணினிக்கு டவுன்லோட் செய்து விடாமால் அதன் தலைப்புகளை மட்டும் பார்வையிட்டு தேவையான மெயில்களை மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைத் தருகிறது. IMAP சேவையில் அனைத்து மெயில்களும் சேர்வரிலேயே தங்குகின்றன. அதனால் வெப் மெயில் போன்றே இணையம் ஊடாக எங்கிருந்தும் அணுகலாம்.

எப்போதும் ஒரே கணினியிலிருந்து மாத்திரம் மெயில்களை அணுகுவதாயின் பொப் மெயில்கள் சிறந்தது. மாறாக உங்கள் மெயில்களை பல்வெறு இடங்களிலிருந்து அணுக வேண்டுமயின் IMAP சிறந்தது எனலாம். .உங்கள் கணினியில் டேட்டா இழப்புகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு வந்து சேர்ந்த இமெயில்களை இழக்க வேண்டியேற்படாது. ஏனெனில் உங்கள் மெயில் சேர்வரில் அவை பாதுகாப்பாக இருக்கும்.

-அனூப்-