Ware.. Ware…Ware ?
என்ன இந்த வெயர்… Ware… வெயர் ?
இந்த சொப்ட்வெயரிலும் பல வகைகள் உள்ளன. கணினியை முழுமையாக தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மென்பொருளை சிஸ்டம் ஸொப்ட்வெயர் / System Software (இயங்கு தளம்) எனப்படுகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
பயனருக்குத் தேவையான பணிகளை கணினி மூலம் செய்து கொள்ளக் கூடிய மென்பொருள்களை எப்லிகேசன் சொப்ட்வெயர் (Application Software) எனப்படுகிறது. எம்.எஸ்.வர்ட், போட்டோ ஷொப் என ஏராளம் மென்பொருள்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
அனேகமான எப்லிகேசன் ஸொப்ட்வெயர் வியாபார நோக்கில் உருவாக்கப்படுவதோடு சில மென்பொருள்கள் இலவச பயன் பாட்டுக்கெனவும் உருவாக்கப்படும். அவ்வாறே நமது கணினியை இயங்க விடாமல் முடக்கும் வண்ணமும் நமது கணினிச் செயற்பாட்டை அவதானிக்கும் வண்ணம தீய நோக்குடனும்கூட சில ப்ரோக்ரம்கள் உருவாக்கப்படும்
மெல்வெயர்
கணினிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் எந்த வகையான ப்ரோக்ரம்களையும் மெல்வெயர் Malware எனப்படும். மெலிசஸ் சொப்ட்வெயர் (Malicious Software) எனும் பதங்களிலிருந்தே இந்த மெல்வெயர் எனும் சொல் உருவானது வைரஸ், வேர்ம், ஸ்பைவெயர் போன்ற அனைத்தும் மெல்வெயர்களே. இவ்வாறான ப்ரோக்ரம்கள கணினிப் பயனராலேயே எதிர்பாராத விதமாக நிறுவப்பட்டு விடும். பிரவுஸரின் ஹோம் பேஜ் மாறுதல், (இதனை பிரவுசர் ஹைஜெக்கிங் எனப்படும்) புதிதாக டூல் பார்கள் தோன்றுதல் பொப் அப் விண்டோக்கள் தோன்றுதல் பிரவுஸர் முடங்கி விடுதல் போன்றன பொதுவான மெல்வெயர் அறிகுறிகளாகும்.
ஸ்பைவெயர்
ஸ்பைவெயர் (Spyware) என்பதும் தீய நோக்குடன் உருவாக்கபப்டும் ஒரு மென்பொருளே. இது கணினியில் ஊடுறுவி உங்கள் நடவடிக்கைகளை வேவு பார்க்கிறது. கீலொக்கர் (Key Logger) எனபது பொதுவான ஒரு ஸ்பைவெயர் ஆகும். இது கீபோர்டில் நீங்கள் அழுத்தும் விசைகளைப் பதிவு செய்கிறது. இதன் மூலமாகாவே இணையத்தினூடு வழங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்கள் அடுத்தவர் கையில் சிக்குகிறது. சில ஸ்பைவெயர் மென்பொருள்கள் உங்கள் இணைய செயற்பாடை அவதானிக்கும். இவ்வாறு திருட்டுத்தனமாகப் பெறப்படும் தகவல்களைக் கொண்டு அந்த ஸ்பைவெயரை உருவாக்கியவர் உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப இணையத்தினூடு பொருட்களை விறபனை செய்ய முயற்சிப்பார்.
எட்வெயர்
எட்வெயர் (Adware) எனப்படுவதும் மெல்வெயர் வகைகளில் ஒன்றே. எட்வெயர் எனும் பெயரைக் கொண்டே அது விளம்பரங்களைத் தாங்கி வரும் ஒரு ப்ரோக்ரம் என்பதை யாரும் இலகுவில் புரிந்து கொள்ளலாம். அனேகமான இலவச மென்பொருள்களுடன் எட்வெயரும் இணைக்கப் பட்டிருக்கும். உதாரனமாக யாஹூ மெஸ்சென்ஜர், விண்டோஸ் லைவ் மெஸ்ஸென்ஜர் மென்பொருள்களில் இந்த எட்வெயரைக் காணலாம். சில மென்பொருள்களை நிறுவும்போது எட்வெயரை பயனர் விருப்பத்திற்கேற்ப நிறுவும் வகையில் தெரிவுகள் இருக்கும். எனினும் சில மென்பொருள்கள் எம்மை அறியாமலேயே எட்வெயரையும் நிறுவி விடும்.
ஷெயாவெயர்
ஷெயாவெயர் (Shareware) என்பதை நீங்கள் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய மென்பொருள் என யூகித்தால் உங்கள் யூகம் தவறானது. ஷெயாவெயரை ட்ரையல் வெயர் (Trialware) எனவும் அழைக்கப்படும். ஒரு மென்பொருளை உருவாக்கும் ஒரு நிறுவனம் அதனை விற்பனை செய்யும் ஒரு உத்தியாக அம்மென்பொருளை குறிப்பிட்ட சில நாட்களுக்கு இலவசமாகப் பயன் படுத்த அனுமதிக்கும். அந்த மென்பொருளைப் பரீட்சித்துப் பார்க்க நினைக்கும் ஒருவர் அந்நிறுவன இணைய தளத்திலிருந்து இலவசமாக அதனை டவுன்லோட் செய்து அதனைக் கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.
குறிப்பிட காலக்கெடு முடிவடைந்த பின்னர் அதனைப் பயன் படுத்த விரும்பினால் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த கால எல்லையானது குறைந்தது மூன்று நட்களிலிருந்து 30 நட்கள் வரையும் இருக்கலாம். சில ஷெயாவெயர் மென்பொருள்கள் அதனை குறிப்பிட்ட தடவைகள் மாத்திரம் திறந்து பணியாற்றிப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணிக்கை முடிவடைந்த பின்னர் அதனைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது அதனைக் கணினியிலிருந்து அகற்ற வேண்டும்.
குறிப்பிட்ட காலக் கெடு முடிவடைந்த பின்னர் அதனை திறக்க முயற்சிக்கும் போது அது இயங்காமல் போகும் அல்லது ஏதேனுமொரு ஒரு பிழைச் செய்தியைக் காண்பிக்கும். சில ஷெயாவெயர்கள் முழுமையாக இயங்கக் கூடியவாறு வெளியிடப்படும். சில ஷெயாவெயர் மென்பொருள்க்ள் குறிப்பபிட்ட சில அமசங்கள் மட்டுமே இயங்குமாறு இருக்கும்.
பர்ம்வெயர்
கணினியைத் தயரிக்கும்போதே கணினி மத்ர்போர்டில் பொருத்தப்படும் ROM, PROM, EPROM, EEPROM போன்ற நினைவக சிப்புகளையே பர்ம்வெயர் (Firmware) எனப்படுகிறது. இந்த நினைவகங்கள் கணினி இயக்கத்துக்குத் தேவையான சில ப்ரோக்ரம்களை தன்னகத்தே கொண்டிருக்கும். இவை மின் இணைப்பு இல்லாமலேயே அவற்றில் அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் சேமித்து வைத்திருக்கும். எனினும் பர்ம்வெயர் ப்ரோக்ரமை நாம் மாற்றியமைக்க முடியாது. பர்ம்வெயருக்கு உதாரணமாக மதர் போர்டில் பொருத்தப்பட்டுள்ள பயோஸ் சிப்பைக் (Bios Chip) குறிப்பிடலாம்.
ப்ரீவெயர்
வியாபார நோக்கமின்றி இலவச பயன்பாட்டுக்கென உருவாக்கப்படும் மென்பொருள்களை ப்ரீவெயர் (Freeware) எனப்படுகிறது. இவற்றை இணையத்திலிருந்து இலவசமாகாவே டவுன்லோட் செய்து பயன் படுத்தலாம் அடுத்தவர்களோடு பரிமாறிக் கொள்ளலாம். ப்ரீவெயரில் உள்ள முக்கிய குறைபாடு யாதெனில் அதனை உருவாக்குபவர் தொடர்ச்சியாக அதனை விருத்தி செய்வதில்லை. அதேபோல் அதனைப் பயன் படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு உதவிகள் வழங்கப்படு வதுமில்லை.
லைவ் வெயர்
இந்த லைவ் வெயர் (Liveware) எனும் சொல உங்களைத்தான் குறிக்கிறது. அதாவது பல்வேறு வகைப்பட்ட கணினிப் பயனர்களையும் குறிக்கும் ஒரே சொல் லைவ்வெயர்
-அனூப்-