Gmail tips
GMAIL - சில உதவிக் குறிப்புகள்
கூகில் நிறுவனத்தின் இலவச வெப் மெயில் (Web Mail) சேவையான ஜிமெயில் குறுகிய காலத்தில் மின்னஞ்சல் பயனரிடையே அதிக பிரபல்யம் பெற்று விளங்குகிறது. பயனர்களுக்கு அதிக அளவிலான (7 GB) வெற்றிடத்தை தனது சேர்வரில் ஒதுக்கியிருப்பது மட்டுமல்லாது அவ்வப்போது புதுப்புது வசதிகளையும் அறிமுகப்படுத்துவதே இதற்குக் காரணம் எனலாம். ஜிமெயில் வழமையான மின்னஞ்சலோடு ஏராளமான் வசதிகளைகத் த்ருகிறது. குறிப்பாக கூகில் தேடற்பொறியும் ஜிமெயிலில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் மின்னஞ்சல்களை இலகுவாக படிக்கவும் பழைய மெயில்களை தேடவும் நிர்வகிக்கவும் முடிகிறது. இங்கு ஜிமெயில் தரும் நான்கு வசதிகளை உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன்.
ஜிமெயிலிலிருந்து பிற மின்னஞ்சல்களைப் பார்வையிட...
பொதுவாக மின்னஞ்சல் பாவனையாளர்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கண்க்குகளை வைத்திருப்பது வழக்கம். நான் கூட ஜிமெயில், யாகூ, ஹொட் மெயில் என பல மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருக்கிறேன். இந்த மின்ன்ஞ்சல்களை நான் Outlook Express எனும் மெயில் க்ளையண்டைப் பயன் படுத்தி பார்வையிடுவதும் அனுப்புவதும் வழக்கம். Outlook, Outlook Express போன்ற இமெயில் க்ளையண்டுகள் பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே நேரத்தில் நிர்வகிப்பதற்கான வசதியை வழங்குகின்றன. ஒரே கணியைப் பயன் படுத்துபவர்களுக்கு இந்த இமெயில் க்ளையண்ட் சிறந்த தெரிவுதான். எனினும் மின்னஞ்சல்களைப் பார்வையிட நிரந்தரமாக ஒரு கணினியைப் பயன் படுத்தாதவர்கள் தாம் பயன் படுத்தும் ஒவ்வொரு கணினியிலும் இந்த மெயில் க்ளையண்டுக்கான செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டியிருக்கும்.
இமெயில் க்ளையண்டுகள் போன்று பல மின்னஞ்சல் கணக்குகளை பார்வையிடவும் நிர்வகிக்கவும் கூடிய வசதியை ஜிமெயில் தருகிறது. இதன் மூலம் உங்கள் பிரவுசரிலேயே ஜிமெயில் மட்டுமல்லாது பிற நிறுவனங்களின் கண்க்குகளுக்கு வரும் மின்னஞ்சல்கலையும் பார்வையிடலாம்.
அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். முதலில் உங்கள் ஜிமெயில் கண்க்கிற்குள் லொகின் செய்து நுளையுங்கள்.. அங்கு Settings க்ளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் Accounts டேபில் க்ளிக் செய்து Get mail from other accounts என்பத்ன் கீழுள்ள Add another email account என்பதைக் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு பொப் அப் விண்டோ தோன்றும்அங்கு பிற மின்னஞ்சல் கணக்கிற்குரிய முகவரியை வழங்கி அடுத்த கட்டம் செல்லுங்கள். அப்போது அதற்குரிய பாஸ்வர்டை வழங்குமாறு கேட்கும். அதனை வழங்கி கீழுள்ள Add Account பட்டனில் க்ளிக் செய்து விடுங்கள்.
ஜிமெயிலில் Signature சேர்ப்பதற்கு....
பொதுவாக நாங்கள் ஒரு கடிதம் அனுப்பும்போது கடிதத்தின் இறுதியில் எங்கள் கையொப்பத்தையும் (signature) இடுவது வழக்கம். அதே போன்று நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் எங்கள் கையொப்பத்தைச் சேர்க்கலாம் என்பதை அறிவீர்களா? ஆனால் கையொப்பமாக எங்கள் பெயரைக் கிறுக்குவதற்குப் பதிலாக பெயர், பதவி, முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, இணைய தள முகவரி போன்ற விவரங்களே “மின்னஞ்சல் கையொப்பமாக” சேர்க்கப்படும். இந்த கையொப்பம் நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் தானாக ஒட்டிக் கொள்ளும்.
ஜிமெயிலில் இயல்பு நிலையில் (default) இந்த கையொப்பம் இடும் வசதி செயற்படாது. அதனைச் செயற்பட வைப்பதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் நுளையுங்க்ள். அங்கு Settings க்ளிக் செய்து தோன்றும் விண்டோவில் General டேபின் கீழ் Signature என்பதற்கு எதிரேயுள்ள பெட்டியில் நீங்கள் விரும்பிய விவரங்களை கையொப்பமாக் டைப் செய்து விட்டு அதன் கீழுள்ள Save Changes பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
இப்போது நீங்கள் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் உங்கள் கையொப்ப்ம் தோன்றும். எனினும் நீங்கள் அனுப்பும் சில மெயில்களுக்கு சிக்னேச்சர் சேர்க்க விரும்பாத போது அதனை அனுப்பும் முன்னர் டெலீட் கீயை அழுத்தி அகற்றிக் கொள்ளலாம்.
செய்தியின் நடுவே படத்தை இணைப்பதற்கு....
ஏதேனுமொரு ஆவனத்தை மின்னஞ்சல் இனைப்பாக அனுப்ப முடியும் எனபது நீங்கள் அறிந்ததே. குறிப்பாக ஒரு படத்தை இணைப்பாக அனுப்பும் போது அதனைப் பெறுபவர் அந்த படத்தை டவுன்லோட் செய்தே பார்வையிட வேண்டும். ஆனால் தற்போது ஜிமெயில் அறிமுகப்படுத்தி யுள்ள வசதி மூலம் ஒரு படத்தை ஹாட் டிஸ்கிலிருந்தோ அல்லது ஒரு இணைய தளத்திலிருந்தோ COPY - PASTE செய்யாமலேயே நேரடியாக செய்திக்கு நடுவே Embed செய்து இணைத்து விடலாம்.
அதற்கென Insert Image எனும் பட்டனை மின்னஞ்சலை உருவாக்கும் விண்டோவில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இந்த பட்டன் ஜிமெயிலின் வழமையான இடை முகப்பில் தோன்றாது. இந்த வசதியைப் பெற Gmail Labs சென்று அந்த வசதியை செயற்படுத்த வேண்டும்.
Gmail Labs எனப்படுவது புதிய வசதிகளைப் பரீட்சிப்பதற்கான ஜிமெயிலின் ஆய்வு கூடமாகும். இந்த ஜிமெயில் லேப்ஸில் பரீசிக்கப்படுபவை முழுமையாக செயற்பட. ஆரம்பிக்க சிறிது காலம் செல்லலாம் அல்லது எந்நேரத்திலும் கைவிடப்படலாம்.
படத்தை இணைப்பதற்கான வசதியைப் பெற முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் லொகின் (login) செய்து நுளையுங்கள். அங்கு Settings க்ளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் Labs தெரிவு செய்யுங்கள். அங்கு கூகில் எதிர் காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள ஏராளமான புதிய வசதிகள் பரிசோதனை நிலையில் இருப்பதைக் காணலாம். (Labs பட்டன் தோன்ற வில்லையானால் உங்கள் பிரவுசரைப் புதுப்பித்துக் . -Update கொள்ளுங்கள்)
Labs க்ளிக் செய்யத் தோன்றும் விண்டோவில் Inserting Images என்பதற்கு எதிரேயுள்ள Enable என்பதைத் தெரிவு செய்து விட்டு கீழுள்ள Save Changes பட்டனில் க்ளிக் செய்யுங்கள். . இப்போது புதிய மின்ன்ஞ்சல உருவாக்கும் (Compose) விண்டோவில் படத்தை இணைப்பதற்கான ஒரு சிறிய பட்டன் தோன்றியிருக்கக் காண்லாம். அந்த பட்டனில் க்ளிக் செய்து உங்கள் படத்தை செய்திக்கு நடுவே சேர்த்து விடலாம்.
அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெறலாம்
ஒரு இமெயில் அனுப்பிய பிறகு அந்த இமெயிலில் சேர்க்க வேண்டிய சில முக்கியமான விடயங்களை சேர்க்க மறந்து விட்டதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள். . இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் அனுப்பிய மெயிலை திரும்பப் பெறக் கூடிய வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த மெயிலை அனுப்பி ஐந்து வினாடிக்குள்ளேயே திரும்பப் பெற வேண்டும். அதற்கு மேல் தாமதிக்கும்போது உரிய இலக்கை உங்கள் மெயில் சென்றடைந்து விடும். இந்த வசதி இன்னும் ஜிமெயில் லேப்ஸில் பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளது. அதனைச் செயற்படுத்திப் பார்ப்பதற்கு உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் லொகின் (login) செய்து Settings க்ளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் Labs தெரிவு செய்யுங்கள். அங்கு Undo Send என்பதற்கு எதிரேயுள்ள Enable என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள Save Changes பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் ஒரு மின்னஞ்ச்ல் அனுப்பியவுடன் வழமையாகத் தோன்றும் Your message has been sent எனும் செய்திக்கு அருகே Undo எனும் பட்டனும் தோன்றக் காணலாம். அந்த பட்டனில் க்ளிக் செய்து அனுப்பிய மெயிலை ரத்துச் செய்து விடலாம்.
-அனூப்-