டெக்ஸ்ட் பைலை ஒலி வடிவில் மாற்றலாமே!
எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட உங்கள் ஆவணங்களை ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளலாம். இதற்கென எந்தவொரு மென்பொருளையும் டவுன்லோட் செய்யவோ கணினியில் நிறுவவோ வேண்டியதில்லை. ஓன்லைனில் பைல் வடிவை மாற்றும் இந்த வசதியைத் தருகிறது Zamzar. எனும் இணையதளம்.

இதன் மூலம் டெக்ஸ்ட் வடிவிலுள்ள பைல்களை MP3 பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பைல் மாற்றும் சேவை மூலம் எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட (doc) பைல்கள் மட்டுமன்றி odt, pdf, pub, txt, wpd, wps பைல்களையும் ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளலாம்.
எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட (doc) ஆவணமொன்றை MP3 பைலாக மாற்றும் செயற்பாடானது மிக சுலபமானது.. இந்த இனைய தளத்திற்குச் சென்று கணினியிலுள்ள ஆவணத்தை தெரிவு செய்து அதனை அப்லோட் செய்வதோடு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.. அந்த பைலை MP3 வடிவில் மாற்றியவுடன் ஓரிரு நிமிடங்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறது சம்சார் .
சம்சார் இணைய தளம் ஆவணங்களை ஒலி வடிவில் மாற்றித்தருவது மட்டுமன்றி, இமேஜ், வீடியோ, ஓடியோ என ஏராளமான பல்வேறு பைல் போமட்டுகளை விரும்பும் வடிவில் மாற்றக் கூடிய வசதியைத் தருகிறது. அப்லோட் செய்யக் கூடிய பைலின் உச்ச அளவு 100 எம்பி. இந்த சேவையைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளமுகவரி http://zamzar.com/
Change your text file into an audio file
Reviewed by
anoof
on
November 28, 2010
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();