Download YouTube video


YouTube வீடியோவைத் தரவிறக்கம் செய்வதற்கு ..

இணைய வீடியோக்களில் கூகில் நிறுவனத்தின் YouTube அதிக பிரசித்தி பெற்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். எனினும் இந்த வீடியோவைப் ஒவ்வொரு முறையும் (Online) இணையத்தில் இணைந்தே பார்க்க முடியும். ஒரு முறை பார்த்த வீடியோவை மறுபடியும் பார்ப்பதற்கும் இணையத்தில் இணைய வேண்டும். ஓப்லைனில் (offline) பார்ப்பதானால் டவுன் லோட் செய்தே பார்வையிட முடியும்.

யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கு யூடியூப் தளத்திலோ அல்லது நாம் பயன் படுத்தும் பிரவுசரிலோ வசதிகள் இல்லை. எனவே அதற்கு மூன்றாம் தரப்பு மென்பொருள் கருவிகளைப் பயன் படுத்த வேண்டும். இதற்கென் ஏராளமான மென்பொருள் கருவிகள் பயன் பாட்டில் உள்ளன.

யூடியூப் வீடியோக்களை டவுன் லோட் செய்ய நான் இங்கு பரிந்துரைக்க விரும்புவது Real Player எனும் மீடியா ப்லேயர் மென்பொருளாகும்நான் அறிந்த வரையில் யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்ய ரியல் ப்லேயர் இலகுவானதும் விரைவானதுமான ஒரு வழி முறையைத் தருகிறது.

.ரியல் ப்லேயர் மூலம் யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்ய முதலில் Real Player மென்பொருளின் சமீபத்திய பதிப்பை www.real.com எனுன் இணைய தளத்திலிருந்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் ரியல் ப்லேயர் விண்டோவில் Tools மெனுவில் Preferences தெரிவு செய்ய வரும் டயலொக் பொக்ஸில் Enable web download and recording for these installed browsers என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள்.  

மேலும்  டவுன்லோட் ஆகும் வீடியோவை எந்த போல்டரில் சேமிக்க வெண்டும் என்பதையும் குறிப்பிடுங்கள். இனி நீங்கள் பயன் படுத்தும் எந்த பிரவுஸரிலும் யூடியூப் வீடியோ அல்லது வேறு எவ்வகையான இணைய வீடியோ பார்க்கும் போது வீடியோ காட்சியின் மீது மவுஸ் பொயிண்டரை நகர்த்தும்போது வீடியோ விண்டோவின் மேல் Download This Video. எனும் பட்டன் தோன்றக் கானலாம். அந்த பட்டனில் க்ளிக் செய்ய டவுன்லோட் பணி ஆரம்பிகும். .

-அனூப்-