Turn your computer quickly

கணினி இயக்கத்தை விரைவாக நிறுத்திட

விண்டோஸ் இயங்கு தளத்தில் கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்குப் பல வழிகள் உள்ளன. பொதுவாகப்  பலரும் ஸ்டாட் பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில்  சட்டவுன் தெரிவு செய்தே நிறுத்துவது வழக்கம். இந்த முறையின் படி இரண்டு படிகளில் கணினியின் இயக்கம் நிறுத்தப்படுகிறதுஎனினும் இந்த வழியை விடவும் கணினி இயக்கத்தை மிக விரைவாக ஒரேயடியாக நிறுத்தும் வசதியும் விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ளது.

முதல் வழியாக நான் பரிந்துரைப்பது டெஸ்க் டொப்பில் ஒரு shortcut ஐக்கனை உருவாக்கிக் கொள்வதாகும்இந்த ஷோர்ட் கட் ஐக்கனாது  shutdown.exe எனும் விண்டோஸ் பைலைப் பயன்படுத்துகிறது.

ஷோட் கட் ஐக்கனை உருவாக்குவதற்கு முதலில் டெஸ்க் டொப்பில் ரைட் க்ளிக் செய்யுங்கள். வரும் மெனுவிலிருந்து New-Shortcut என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் கட்டத்தில் Type the location of the item எனுமிடத்தில்

; %windir%\system32\shutdown.exe -s -t 0 என டைப் செய்து நேஒவ பட்டனை அழுத்துங்கள். அடுத்து ஷோட் கட்டுக்கு விரும்பிய ஒரு பெயரையும் வழங்கி Finish பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்கு நான் சொல்லும் இரண்டாவது வழி விசைப் பலகை பயன்படுத்துவதாகும். சில விசைப்ப பலகைகளில் அதற்கென தனையாக ஒரு விசை ((Power Button) காணப்படும்அந்த விசை இல்லாத  கீபோர்டில் விண்டோஸ் (Win key) விசையுடன், u விசையை அடுத்தடுத்து இரண்டு முறை அழுத்துங்கள்இந்த  கீபோட் சுருக்க விசை விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் மட்டுமே செயற்படும்.


விஸ்டா பதிப்பில் இதனைச் செயற்படுத்த விண்டோஸ் லோகோ விசையை அழுத்திய பின்னர் வலது அம்புக்குறி விசையை ((Right Arrow) மூன்று முறை அடுத்தடுத்து அழுத்திய பின்னர், u விசையை அழுத்துங்கள்,. விண்டோஸ் செவன் பதிப்பில் வின் கீயை அழுத்திய  பின்னர் Right Arrow விசையை ஒரு முறை அழுத்தி விட்டு Enter விசையைத் தட்டுங்கள்.

-அனூப்-