Google Translate

 தமிழிலும் மொழி பெயர்க்கிறது கூகில் !

tamilணையம் வழியே பல சேவைகளை வழங்கி வரும் கூகில் நிறுவனம் தற்போது தமிழ் மொழி பெயர்ப்பு வசதியையும் கடந்த மாதம்  தனது Google Translate மூலம் வழங்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் டைப் செய்யப்பட்ட ஒரு பந்தி,  ஒரு ஆவணம் அல்லது ஒரு இணைய பக்கம் என்பவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கோ தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கோ இலகுவாக மொழி மாற்றம் செய்து கொள்ளலாம.

தமிழுடன் பிற இந்திய மொழிகளான தெழுங்கு, கன்ன்டம், குஜராத்தி, பெங்காலி மொழிகளுக்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழிலிருந்து ஆங்கில மொழிக்கு மட்டுமன்றி பிற மொழிகளுக்கும் இதன் மூலம் மொழி மாற்றம் செய்து கொள்ளலாம். ஹிந்தி மொழிக்கான மொழிபெயர்ப்பு சேவையை முன்னரேயே ஆரம்பித்திருந்தது. தற்போது  கூகில் நிறுவனம் மொத்தம் 63 உலக மொழிகளுக்கு மொழி பெயர்ப்பு சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை கூகில் இணைய தளத்தில் Translate லிங்கில் க்ளிக் செய்து பெறலாம். அல்லது நேரடியாக http://translate.google.lk என டைப் செய்தும் அணுகலாம்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();