Where is my file?
பைல்
எங்கே இருக்கிறது?
சில வேளைகளில் நாம் திறந்து
பணியாற்றும் பைல் எந்த போல்டரியல்
இருக்கிறது என்று தெரியாமல் திண்டாடுவோம். டைட்டில் பாரில் அந்த பைலின் பெயர்
மட்டுமே காட்டப்படும். பைல் இருக்கும் இடம் எது? அது இருக்கும் போல்டரின் பெயர்
என்ன என்று தெரியாமல் இருப்போம். அந்த பைல் இருக்கும் இடத்தின் முழு விபரமும்
டைட்டில் பாரில் தெரிந்தால் எவ் வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? அனைத்து தகவல்களையும் டைட்டில் பாரில்
இருக்கும்படியும் செய்யலாம்.
அதற்கு விண்டோஸ் எக்ஸ்ப்லோ ரரைத் திறந்து கொள் ளுங்கள். அதில் Tools மெனுவில் அதில் உள்ள Folder
options
தெரிவு செய்யுங்கள். பின்பு அதில் உள்ள View டேபைக் கிளிக் செய்து ‘Display full path in title bar ‘ என்ற என்பதற்கு
இடப்புறம் உள்ள கட்டத்தைத் தெரிவு செய்யுங்கள். இனி உங்கள் பைலின் இருப்பிடம்
உங்கள் டைட்டில் பாரில் காட்டப்படும்.
-அனூப்-