What is WiMax?

WiMAX  என்றால் என்ன?

வைமேக்ஸ் என்பது கம்பியில்லா தொழிநுட்பம் மூலம் பெரு நகர கணினி வலையமைப்புக்களை உருவாக்க உதவும் மற்றுமொரு தொழில் நுட்பமாகும்.  இணைய இனைப்பிற்காக வீடுகளிலும் அலுவலகங்களிலும் தற்போது அதிக பயன் பாட்டிலுள்ள வைபை போன்ற  ஒரு தொழில் நுட்பமே வைமேக்ஸ். எனினும் வைபை ஒரு சிறு இடப் பரப்பினுள் உள்ள கணினிகளை இணைக்கவே பயன் படுகிறது.  வைபை மூலம் பெரும் பரப்பை இணைக்க வேண்டுமாயின் ஏராளமான வைபை ரிபீட்டர் கருவிகளைப் பல் வேறு இடங்களில் பொருத்த வேண்டியிருக்கும். அவவாறே இணைத்தாலும் அனைத்தையும் பராமரிப்பது இலகுவான விடயமல்ல. எனவே பல மைல் துர்ர இடை வெளிகளிலுள்ள  கணினிகளை கம்பியில்லா தொழில் நுட்பம் மூலம் இணைக்க இது சிறந்த வழி முறையாகாது. பெரும் பரப்பு வலையமைப்புகளுக்கு இது  பொறுத்தமற்ற்து

பல மைல் தொலைவிலுள்ள கணினிகளை இணைக்கவென உருவாக் கப் பட்டிருக்கும் தொழில் நுட்பமே வைமேக்ஸ்.  வைமேக்ஸ் என்பது அதன் தொழில்நுட்ப தர நிர்னய பெயரான IEEE 802.16 எனபதாலும் அறியப் படுகிறது. இது வைபை தொழில் நுடபத் தர நிர்ணயமான Wi-Fi 802.11 என்பதற்கு நிகரானது.


வை-மேக்ஸ் தொழில் நுட்பம் இரண்டாம் தலை முறை அகலப் பட்டை கம்பியில்லா தொழில் நுட்பம் எனவும் அறியப் படுகிறது.  வை-மேக்ஸ் சமிக்ஞைகள் அதிக தொலைவிவ்க்குச் (சுமார் 30 மைல்) செல்வதன் காரணமக ஒரு பெருநகர்பரப்பிள்லுள்ள கணினி வலையமைப்பை உருவாக்கவோ அல்லது இணைய இணைப்பை வழங்கவோ முடிகிறது.  

-அனூப்-