Torrent Download என்றால் என்ன?
Torrent Download என்றால் என்ன?
பிட்டொரெண்ட் (BitTorrent) என்பது
இணையம் வழியே பைல்களை இலவசமாகவும் விரைவாகவும் டவுன்லோட் செவதற்கான ஒரு தொழில் நுட்பமாகும். அதாவது
இணையத்திலிருந்து அளவில்
பெரிய மென்பொருள்கள், வீடியோ பைல்கள், திரைப் படங்கள்,
பாடல்கள், கணினி விளையாட் டுக்கள் போன்றவற்றை டவுன்லோட் செய்வதற்குப் பயன்படும் ஒரு பொறி முறையாகும்.
இது peer to peer எனும் நியதிக்கமைய (protocol) செயற்படுகிறது, peer to peer என்பது டெஸ்க்டொப் கணினி, மடிக்கணினி போன்ற தனி நபர் கணினிகளினிடையே பைல்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சமமான செயற் திறன் வாய்ந்த கணினிகளின் வலையமைப்பாகும். இங்கு சேர்வர் கணினியற்ற அதே வேளை பதிவேற்றம் (upload)/ பதிவிறக்கம் (download) என இரு வகையான செயற்பாடுகளையும் அனைத்துக் கணினிகளாளும் நிறைவேற்றக் கூடியதாயிருக்கும்.
டொரெண்ட் தொழில் நுட்பத்தில் ஒரு பைலை டவுன்லோட்
செய்யும் போது வழமையான ஒரு இணைய சேர்வரிலிருந்து ஒரு பைலை டவுன்லோட் செய்வது போலனறி ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள இங்கு பங்களிப்புச் செய்கின்றன. ஒரு பைலை டவுன்லோட் செய்யும் போது இங்கு ஒவ்வொரு கணினியும் சேர்வராகவும் (server- சேவை
வழங்கும் கணினி) இயங்குகிறது; க்லையண்டாகவும் (client-சேவைகளைப்
பெற்றுக் கொள்ளும் கணினி)
இயங்குகிறது.
Torrent பைலகள் .torrent எனும் பைல் நீட்சியைக் கொண்டிருக்கும்., இணையத்திலிருந்து Torrent பைலகளளை டவுன்லோட் செய்ய uTorrent
போன்ற டொரெண்ட் மென்பொருள்கள்
பயன் படுத்தப்படுகின்றன. ஒரு டொரென்ட் பைல் ஒரு சில கிலோ பைட்டுகள் அளவைக் கொன்டிருக்கும். இந்த டொரென்ட் பைல் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் பைலுக்கான தடயங்களைக் கொன்டிருக்க்கும். டவுன்லோட்
செய்ய விரும்பும் அந்த பைல் ஒரு கிகா பைட் அளவை விட அதிகமாகவும் இருக்கலாம்.
வழமையான முறையில் பைலை டவுன்லோட் செய்யும் போது பிரவுஸரில் டவுன்லோன்ட் செய்ய வேண்டிய பைலுக்குரிய
லிங்கில்
(link) க்லிக் செய்யும் போது உரிய சேர்வரை அடைந்து அந்த பைலை எமது கணினிக்கு டவுன்லோட் செய்து
தரும்.
மாறாக பிட்டொரென்ட் தொழில் நுட்பத்தில் பிரவுசருக்குப் பதிலாக டொரென்ட் மென்பொருள் பயன் படுத்தப்படுகிறது, இந்த மென்பொருள் ஒரு பைலை டவுன்லோட் செய்யும் போது குறிப்பிட்ட ஒரு சேர்வ்ரில் மட்டும் தங்கியிராமல் அந்த குறித்த மென்பொருள் சேமிக்கப் பட்டிருக்கும் பல்வேறு கணினிகளை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்கிறது.
ஒவ்வொரு கணினியிலும் அந்த
பைலுக்குரிய வெவ்வேறு பகுதிகள் இருக்கலாம். அங்கு அவை முழுமையான பைலாக் அல்லாமல் ஒரு சில பகுதிகளைக் கூட கொண்டிருக்கலாம். அவற்றைக்
கண்டறிந்து எமது கணினிக்கு டவுன் லோட் செய்து விடுகிறது. நாம் டவுன்லொட் செய்யும் அதே பைலை வேறொருவர் வேறொரு இடத்திலிருந்து அதே நேரம்
டவுன்லொட் செய்யும் போது எமது கணினியிலிருக்கும் ஏற்கனவே
டவுன்லோட் செய்த பகுதியிலிருந்து அவர் கணினிக்கு அப்லோடும்
செய்து விடுகிறது. அதாவது நாம் டவுன்லோட் செய்யும் பைல் upload / download என
இரண்டு செயற்பாடுகளுக்கும் ஒரே நேரத்தில் உட்படலாம்.
மேலும் ஒரு
பைலுகுரிய பகுதிகளை வரிசைக் கிரமமாக அல்லாமல் எழுமாறாக வேவ்வேறு கணினிகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் கணினி விட்டு கணினி தாவி ஒரு பைல் டவுன்லோட் செய்யப்படும்போது விரைவாக அந்த பைல் நம்மை அடைந்து விடுகிறது. ஓரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தும் டவுன்லோட் செய்து பூர்த்தியானதும் டொரெண்ட் மென்பொருளினால அவை ஒன்று செர்க்கப்பட்டு முழுமையான ஒரு
பைலாக எமக்கு வழங்குகிறது.
நீங்கள் விரும்பிய பைலை டவுன்லோட் செய்து முடிந்ததும் உங்கள் வேலை முடிந்து விடாது. நீங்கள் டவுன்லோட் செய்தது போன்றே அதே பைலை அப்லோட் செய்வதற்கும் நீங்கள் தயாராய் இருத்தல் வேண்டும். இது டொரென்ட் உலகில் கடைபிடிக்கப் படும் ஒரு தர்மம். டொரெண்ட் டவுன்லோட் சேவை பிரபல்யமாவதற்கு இதுவும் ஒரு காரணம் என்லாம். எனினும் இந்த அப்லோட் பணி உங்களை அறியாமலேயே நடைபெறும். எனவே டொரெண்ட் மென்பொருளிலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்த பைலை குறிப்பிட்ட காலத்திற்கு நீக்கி விடாமல்
பாதுகாக்க வேண்டும்.
சட்ட விரோத மென்பொருள் பயன்பாடு, விநியோகம், காப்புரிமை மீறல் என்பன இந்த டொரெண்ட் உலகில் சர்வ சாதாரணமான விடயங்களாகும்.
ஒரு மென்பொருளை டொரெண்ட் மூலம் டவுன்லோட் செயவது எப்படி?.
முதலில் ஒரு டொரெண்ட் மென்பொருளை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். யுடொரெண்ட் எனும் (µTorrent) மென்பொருளை http://www.utorrent.com எனும்
இணைய் தளத்திலிருந்து பெறலாம்.
அடுத்து பிரவுஸரைத்த் திறந்து Torrent
பைல்களின் தேடற் பொறியொன்றை அடையுங்கள். உதாரணமாக http://torrentz.in/ எனும் தளத்தைக் குறிப்பிடலாம்.
அங்கு தேடற் பெட்டியில் நீங்கள் டவுன்லொட் செய்ய விரும்பும் மென்பொருளின் அல்லது திரைப்படத்தின் பெயரை டைப்
செய்து Search பட்டணில் க்ளிக் செய்யுங்கள்.
அப்போது நீங்கள் டவுன்போட் செய்ய விரும்பும் பைலை அடைவதற்கான தடயங்களைக் கொண்ட டொரெண்ட் பைல்க்ளைப் பட்டியலிடும். அங்கு நீங்கள் விரும்பிய பைலைக் க்ளிக் செய்யலாம். (பட்டியலில் முதலில் உள்ளவை விளம்பரதாரர்களின் டொரென்ட் பைல்கள் என்பதால் அவற்றைத தவிர்ப்பது நல்லது) அப்போது ஒரு டொரெண்ட் பைல் உங்கள் கணினிக்கு
டவுன்லோட் ஆகும். அந்த பைல் ஒரு சில கிலோ பைட்டுக்கள் கொண்ட ஒரு அளவில் சிறிய பைலாக இருக்கும்.
டவ்ன்லோட் செய்த அந்த சிறிய பைலின் மீது இரட்டைக் க்ளிக் செய்யும் போது கணினியில் நீங்கள் ஏற்கனவே நிறுவியுளள டொரெண்ட் மென்பொருள் திறந்து கொண்டு நீங்கள் விரும்பிய பைலை டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கும். முழுமையாக ஒரே தடவையில் டவுன் லோட் செய்யாமல் தேவைப்படும் போது டவுன்லோட் பணியை நிறுத்தி
உங்களுக்கு வசதியான நேரத்தில் மறுபடியும் டவுன்லோடை ஆரம்பிக்கவும் முடியும்
-அனூப்-