What is Case Sensitive?
Case Sensitive என்றால் என்ன?
கணினியில் நம் உள்ளீடு செய்யும் எழுத்துக்களை அனைத்தும்
ஆங்கில் பெரிய எழுத்துக்கள் (uppercase /capital letters) சிறிய எழுத்த்துக்கள் (lowercase / small letters) என
வேறு படுத்தி இன்ம் காணப்படுவதையே Case-sensitive எனப்படுகிறது. உதாரணமாக Computer மற்றும்
computer
என்பன இரண்டு வெவ்வேறு வார்த்தைகளாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் இங்கு C எனும் எழுத்து uppercase இலும் lowercase இலும் எழுதப் பட்டுள்ளது.
கணினி பயன் பாட்டின் போது பயனர் பெயர்கள் மற்றும் பாஸ்வர்ட்
என்பன அனேகமாக Case-sensitive
ஆகவே பயன் படுத்தப்படுவது வழக்கம். அதாவது நீங்கள் வழங்கும் பயனர் பெயரோ அல்லது
கடவுச் சொல்லோ உரிய (case)
கேஸிலேயே வழங்கப் பட வேண்டும். இல்லாவிடின் உங்களால் அந்தப் பயனர் கணக்கை அணுக முடியாது.
விசைப் பலகையில் caps lock விசை இயங்கு நிலையில் இருக்கும் போது உங்கள் கணக்கிற்கு
லொகின் செய்ய முடியாமல் போன அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
கேஸ் சென்ஸிடிவ் இல்லை (not case sensitive) எனும் போது uppercase அல்லது lowercase எழுத்துக்கள் எதனையும்
நீங்கள் வழங்கலாம்.. உதாரணமாக
விண்டோஸ் கமாண்ட்
ப்ரொம்ட் case-sensitive அற்றது. இங்கு "cd",
"CD", "Cd", or "cD" என விரும்பிய விதத்தில் வழங்கலாம்.
-அனூப்-