What is SSD?

SSD என்றால் என்ன?

ஹாட் டிஸ்க் ட்ரைவுக்கு மாற்றீடாக எதிர் காலத்தில் கணினிகளில் இடம் பிடிக்கப் போகிறது SSD எனும்  Solid State Drive. இது ஹாட் டிஸ்க் போனறு மின் இணைப்பின்றி டேட்டாவை நிரந்தரமாக சேமித்து வைக்கக் கூடிய ஒரு துணைத் தேக்கச் சாதனமாகும். டேடாவைப் பதிவு (write) செய்வதற்கும் (read) படிப்பதற்கும் SSD ட்ரைவ் ஹாட் டிஸ்க் போன்றே IDE மற்றும்  SATA இடை முகப்புகளுடன் கணினியில் இணைக்கப் படுகிறது.

SSD ட்ரைவ்கள் ஹாட் ட்ரைவ் போன்றே தொழிற்பட்டாலும் அவற்றின் உள்ளுறுப்புக்கள் வேறு பட்டவை. ஹாட் டிஸ்க் ட்ரைவில் போன்று SSD இல் அசையும் பாகங்கள் இல்லை. அதனால் தான் அதனை ஆங்கிலத்தில்  ளழடனை ளவயவந  (திட நிலை) எனப்படுகிறது. ஹாட் டிஸ்க்கில் டேட்டாவை பதிவு செய்யவும்  படிக்கவும் பயன்படும் மின்காந்தப் புல தொழில் நுட்பத்துக்குப் பதிலாக இங்கு  பெண் ட்ரைவ் போன்ற flash memory தொழில் நுட்பம் பயன் படுகிறது.

SSD இல் அசையும் பாகங்கள் இல்லாததனால் டேட்டாவை அணுகவோ படிக்கவோ பயன்படும் ட்ரைவ் ஹெட்டை (drive head)  ட்ரைவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அசைக்க வேண்டியதில்லை. எனவே ஹாட் டிஸ்கை விடை SSD லிருந்து வேகமாக தரவுகளைப் படிக்கலாம்.

ஹாட் ட்ரைவை விட SSD பல அனுகூலங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஹாட் டிஸ்கில் ஒரு பைலுக்குரிய பகுதிகள் சிதறலாக பல் வேறு இடங்களில் சேமிக்கப்படுவதால் அதிகளவில் டேட்டா சேமிக்கப்படும் போது டேட்டாவைப் படிக்கும் ஆற்றல் குறைந்து விடுகிறது. எனினும் இக்குறைபாடு SSD இல் ஏற்படுவதில்லை. அதனால் ஹாட் டிஸ்கைப் போன்று SSD க்களை டிப்ரேக்மன்ட் (defragment) செய்யவும் அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் SSD இல் காந்தப் புல தொழிநுட்பம் பயன்படுத்தப்படாமையினால் தீவிர காந்தப் புலங்களுக்கு அருகாமையில் இருந்தாலும் டேட்டா இழப்புக்கள் ஏற்படுவதில்லை.

அசையும் பாகங்கள் இல்லாமையினால் அது பழுதடைவதற்கான வாய்ப்புக்களும் குறைவு என கருதப்படுகிறது. மேலும் அது நிறை குறைந்தது. இயங்கும்போது இரைச்சலை உண்டாக்காதுகுறைந்தளவு மின் சக்தியையே பயன் படுத்துகின்றது. இது போன்ற பல அனுகூலங்களினால் SSD தற்போது  மடிக்கணினிகளில் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளது

ஹாட் ட்ரைவை விட பல அனுகூலங்கள் காணப்பட்டாலும் ஒரு சில பிரதி கூலங்களையும் SSD கொண்டுள்ளது. குறிப்பாக அதன் விலை ஹாட் டிஸ்கை விட மிக அதிகமாகவுள்ளது. SSD தொழிநுட்பம் புதிதென்பதாலேயே அதன் அதிக விலைக்குக் காரணம் கூறப்படுகிறது. மேலும் அதன் கொள்ளளவும் இன்னும் சிறிய அளவிலேயே உள்ளதுடேட்டாவை அழித்து மீள பதிவு செய்யும் எண்ணிக்கையும் மட்டுப் படுத்தப்பட்டதால் காலம் செல்லச் செல்ல அதன் செயற் திறனும் குறைந்து விடும் சாத்தியம் உண்டு.


எனனினும் தற்போது SSD தொழில் நுட்பம் வளர்ந்து வருவதாலும் விலையும் கூட குறைந்து வருவதாலும் தற்போது பயன் பாட்டிலுள்ள ஹாட் டிஸ்குகளுக்கு மாற்றீடாக இன்னும் சில வருடங்களில் கணினிகளில் SSD ட்ரைவ் பரவலாகப் பயன் படுத்தப்படும் என்பதை இப்போதே உறுதியாகக் கூறலாம்.

அனூப்