Print to file - Print without a printer
ப்ரிண்டர்
இல்லாமலேயே அச்சிட Print to
file
நீங்கள்
கணினியில் உருவாக்கிய ஒரு பைலை (உதாரணமாக எம். எஸ். வர்ட் ஆணமொன்றை) உங்களிடம் அச்சுப் பொறி இல்லாத நிலையில் அதனை அச்சிடாமலேயே ஒரு ப்ரிண்டர் பைலாக கணினியில் சேமித்துக் கொள்ளலாம். அந்த பைலை அச்சிட்டால் எவ்வாறு நமக்குத் தோற்றமளிக்குமோ அதே வடிவில் பக்க அமைப்புக்கள் மாறாமல் பேணப்படும்.
இவ்வாறு
ப்ரிண்டர் பைலை உருவாக்கும் போது .prn எனும் பைல் நீட்சியுடன் அவை சேமிக்கப் படுகின்றன. கணினியில் நிறுவியுள்ள ப்ரிண்டர் ட்ரைவர் மென்பொருளி னாலேயே இந்த .prn பைல் உருவாக்கப் படுகின்றன. இந்தப் .prn பைலை பின்னர் PDF பைலாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். மேலும் .prn பைலாக சேமிக்கும் போது அச்சுப்பொறி இணைக்கப் பட்டுள்ள ஒரு கணினியில் நீங்கள் ஆவணத்தை உருவாக்கிய குறித்த அப்லிகேசன் இல்லாமலேயே அதனை அச்சிட்டுக் கொள்ளலாம்
தற்போதைய விண்டோஸ்
பதிப்புக்களில் XPS எனும் ப்ரிண்டர் பைல் அறிமுகப் படுத்தப் பட்டுளளது குறிப்பிடத் தக்கது. இந்த ப்ரிண்டர் பைலை உருவாக்குவதற்கு ப்ரிண்ட் டயலொக் பொக்ஸில் print to
file என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.
அனூப்