You can find your folder open after restart

போல்டரைத் திறந்த நிலையிலேயே வரவழைக்க..

ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும் அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமல் தானாகவே அந்த போல்டரை திறந்த நிலையில் வர வைக்கலாம். எனினும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.


ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள்.; விண்டோஸ் செவன் இயங்கு தளத்தில்  Organize மெனுவில் Folder and Search options    (விண்டோஸ் xp யில் Tools மெனுவில் Folder Options)  தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள். அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்கள். கணினி மறுபடி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.

அனூப்