How to use Disk Management tool?
ஹாட்டிஸ்க் பாட்டிசன் செய்ய Disk Management tool
கணினியிலுள்ள ஹாட் டிஸ்கை நிர்வகிக்கவென விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் வசதியே டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவியாகும். இதன் மூலம் ஹாட் டிஸ்கில் புதிதாக பாட்டிசன் உருவாக்குதல், நீக்குதல், போமட் செய்தல் பொன்ற ஹாட் டிஸ்க் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் உள்ள டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்கில் பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசன்களை உருவாக்கலாம். ஆனால் ஏற்கனவே பாட்டிசன் செய்யப்பட்ட பகுதியினுள் டேட்டா இழப்பின்றி மேலும் பாட்டிசன்களை உருவாக்க முடியாது. அவ்வாறு மறுபடியும் பாட்டிசன்களை உருவாக்க வேண்டுமானால் பாட்டிசன் மேஜிக் போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள் கருவிகளையே உபயோகிக்க வேண்டும். அல்லது விண்டோஸை மறுபடி நிறுவும்போது தேவையான பாட்டிசன்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆனால் டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்கை விரும்பியவாறு பாட்டிசன் செய்து கொள்ளும் வசதியை விண்டோஸ் எக்ஸ்பீயிற்குப் பின்னர் வந்த பதிப்புகளான விஸ்டா, 7, மற்றும் 8 பதிப்புகள் வழங்குகின்றன. இதன் மூலம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு பாட்டிசனைச் சுருக்கி புதிதாக மேலும் பாட்டிசன்களை உருவாக்குதல் (Shrink), பாட்டிசனின் அளவை அதிகரித்தல் (extend) பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசனை உருவாக்குதல், போமட் செய்தல் (Format) போன்ற பல்வேறு ஹாட் டிஸ்க் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
இந்த டிஸ்க் மெனேஜ்மண்ட் கன்சோலை Disk Management console (மை) கம்பியூட்டட்ர் மேல் ரைட் க்ளிக் செய்து Manage கட்டளையைத் தெரிவு செய்வதன் மூலம் அல்லது ரன் பொக்ஸில் Diskmgmt.msc என டைப் செய்வதன் மூலம் அணுகலாம். டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவியை Manage கட்டளை மூலம் அணுகியிருப்பின் அதில் Storage க்ளிக் செய்து Disk Management தெரிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே பாட்டிசன் செய்யப்பட்ட ஒரு ஹாட் டிஸ்கை இரண்டு பாட்டிசன் கொண்டதாகப் பிரிக்க வேண்டுமானால் அந்த பாட்டிசன் மீது மேல் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Shrink Volume தெரிவு செய்ய வேண்டும். அப்போது புதிதாக பாட்டிசனை உருவாக்க எவ்வளவு வெற்றிடம் உள்ளது என்பதை டிஸ்க் மெனெஜ்மண்ட் கருவி பரீட்சிக்க ஆரம்பிக்கும்.
புதிதாக பாட்டிசன் ஒன்றை உருவாக்குவதற்குப் போதிய இடம் உள்ளதா எனப் பரீட்சித்த பின்னர் Shrink டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு ஹாட் டிஸ்கை பாட்டிசன் செய்வதற்கு முன்னர் உள்ள பாட்டிசனின் மொத்த அளவு, அதனை சுருக்குவதன் மூல்ம் கிடைக்கப் பெறும் வெற்றிடம், புதிய பாட்டிசனை உருவாக்க நீங்கள் வழங்க விரும்பும் அளவு மற்றும் புதிதாக பாட்டிசனை உருவாக்கிய பின்னர் மாற்றமடையும் ஏற்கனவே இருந்த பாட்டிசனின் அளவு என்பவற்றை இந்த Shrink டயலொக் பொக்ஸில் பட்டியலிடும்.
இங்கு மை கம்பியூட்டர் திறந்து ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தைப் பரீட்சிக்கும் போது அதிக வெற்றிடம் இருப்பதாகக் காட்டினாலும் அதனை சுருக்கி புதிதாக பாட்டிசனை உருவாக்குவதற்கு மிகக் குறைந்த அளவிலான வெற்றிடமே இருப்பதாக Shrink டயலொக் பொக்ஸ் காண்பிப்பதை அவதானிக்கலாம்.
இதற்கான காரணம் யாதெனில் பேஜ் பைல் (page file)) ஹைபனேசன் (hibernation) மற்றும் ரீஸ்டோர் (restore) போன்ற செயற்பாடுகளுக்கு ஹாட் டிஸ்கில் குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே ஒதுக்கப்படிருக்கும்.. இந்த பைல்களை அன்மூவபல் பைல் (unmovable files) எனப்படும். இவற்றை டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவியினால் இடமாற்றம் செய்ய முடியாது இந்த அன்மூவபல் பைல்களைத் தவிர்த்து ஏனைய பகுதிகளிலுள்ள மீதமுள்ள வெற்றிடமே புதிய பாட்டிசனை உருவாக்கக் கூடிய உச்ச அளவாகக் காண்பிக்கும்.
Enter amount of space to shrink எனுமிடத்தில் தேவையான அளவை வழங்கி விட்டு Shrink பட்டனில் க்ளில் செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் புதிதாக ஒரு பாட்டிசன் உருவாகக் காணலாம்.
பாட்டிசனை உருவாக்கிய பின்னர் அடுத்த கட்டமாக அதனை பயன் படுத்துவதற்கு அந்த பாட்டிசன் மேல் ரைட் க்ளிக் செய்து New Simple Volume எனபதைத் தெரிவு செய்ய ஒரு விசர்ட் தோன்றி வழி நடத்தும். அதனை நிறைவு செய்து புதிய பாட்டிசனை பயன்படுத்த அரம்பிக்கலாம்.
அனூப்