Microsoft Remote Desktop
மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ்
பயனர்களுக்குத் தொலைவிலிருந்து தமது வீட்டுக் கணினியையோ அல்லது அலுவலகக்
கணினியையோ அணுகக் கூடிய வசதியத் தரும் Microsoft Remote Desktop
எனும் என்ட்ரொயிட்
எப்லிகேசனை அண்மையில் வெளியிட்டுள்ளது. அண்ட்ரொயிட் இயங்கு தளத்துடன் கூடிய
டேப்லட் கணினி மற்றும் ஸ்மாட்போன் போன்ற கையடக்கக் கருவிகளிலிருந்து உலகின்
எப்பாகத்திலிருந்தும் உங்கள் கணினியை அணுகக் கூடிய வசதியை இது தருகிறது. இந்த அப்லிகேசன் மூலம்
உங்கள் வீட்டுக் கணினியிலுள்ள பைல்களையோ பயன்பாட்டு மென்பொருள்களையோ
தொலைவிலிருந்தே திறந்து பார்க்கலாம்; இயக்கலாம். இதனை நீங்கள் Google Play-store
லிருந்து இலவசமாகத்
தறவிறக்கலாம்.
 |
| Remote Desktop |
Remote
Desktop
வசதியென்பது ஒரு புதிய விடயமல்ல. இவ்வசதி ஏற்கனவே விண்டோஸின் அண்மைக்காலப்
பதிப்பு களில் டெஸ்க்டொப் கணினிகளுக் கென வழங்கியிருந்தது, தற்போது கையடக் கக்
கருவிகளுக்கும் இதே ரீமோட் டெஸ்க்டொப் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது. எனினும்
மிக அண்மையில் அறிமுகமாகி கணினிப்
பயனரிடையே பிரபல்யம் பெற்று வரும் டீம்-வியூவரிலும் கூட இதே ரீமோட் டெஸ்க்டொப் வசதியைப் பெறலாம் என்பதை அவசியம் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.
-அனூப்-
Microsoft Remote Desktop for Android
Reviewed by
anoof
on
December 20, 2013
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();