Video Wallpaper

வீடியோ வோல்பேப்பர் 

விண்டோஸ் டெஸ்க் டொப்பில்  முகப்புப் படமாக (wallpaper) இதுவரை காலமும் வித விதமன நிழற் படங்களை இட்டே மகிழ்ந்திருப்பீர்கள். எனினும் முகப்புப் படமாக வீடியோ காட்சியொன்றை வரவழைக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அதற்கு உங்கள் கனினியில்  ஓபன் சோர்ஸ் மீடியா ப்லேயர் மென்பொருளான  VLC player நிறுவியிருத்தல்  அவசியம். அதனை நீங்கள் videolan.org எனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

முதலில் VLC player இயக்குங்கள். அடுத்து Tools மெனுவில்  Preference தெரிவு செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் video   பட்டனை க்ளிக் செய்யுங்கள். அங்கு Output எனுமிடத்தில் ட்ரொப்டவுன் பட்டனில் க்ளிக் செய்து DirectX video output என்பதைத் தெரிவு செய்து Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள்

அடுத்து VLC player  ஊடாக ஒரு வீடியோ பைலைத் திறந்து கொள்ளுங்கள். வீடியோ இயங்கும் பொது அதன் மீது ரைட் க்ளிக் செய்து DirectX Wallpaper என்பதைத் தெரிவு செய்யுங்கள். இபோது டெஸ்க்டொப்பைப் பாருங்கள். டெஸ்க்டொப் ஐக்கன்களுக்கு பின்னே வீடியோ காட்சி தெரிவதைப் பார்த்து வியந்து போவீர்கள்.


இவ்வாறு வீடியோ காட்சி ஒன்றை டெஸ்க்டொப் வோல் பேப்பராக மாற்றுவது ரசிக்கக் கூடியதாயிருந்தாலும் அது கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம்
-அனூப்-