Zip Files

சிப் பைல்கள்

இணைய பயனர்களுக்கு சிப்-பைல் (zip) என்பது ஒரு பரிச்சயமான பைல் வகையாகும். சிப் பைல் என்பது சுருக்கப்பட்ட (compressed file)  பைல் என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக நீங்கள் ஒரு பைலை டவுன்லோட் செய்யும் போது அந்த பைலின் பெயர்ப் "filename.zip,"   என இருந்தால அந்த பைல் ஒரு சிப் பைலாகும். சிப் செய்வது என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை ஒரு சிறு பைலாக மாற்றுவதாகும். ஒரு சிப் பைல் ஹாட் டிஸ்கில் குறைந்தளவு  இடத்தையே பிடித்துக் கொள்வதோடு அதனை வேறொரு கணினிக்கோ அல்லது பென் ட்ரைவிற்கோ மிக வேகமாக மாற்றிக் கொள்ளலாம்.  இதன் காரணமாகவே இணையத்தில் நீங்கள் டவுன்லோட் செய்யும் அனேகமன பைல்கள் சிப் பைல்களாகக் கிடைக்கின்றன.

ஒரு சிப், பைலை பயன் படுத்துவதற்கு அதனை முதலில் அன்சிப் (unzip) செய்தல் வேண்டும். அதவது சுருக்கப்பட்ட அந்த பைல விரிவடையச் செய்தல் வேண்டும். WinZip, WinRar என்பன அன்சிப் செய்வதற்கான சில பிரபலமான மென்பொருள் கருவிகளாகும். இந்த மென்பொருள் கருவிகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. -அனூப்-
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();