இணைய தளங்களின் “அறிவிப்பு” தொல்லையை நிறுத்த..

இணைய பயன்பாட்டின் போது அனேகமான இணைய உலாவிகள் நாம் பார்வையிடும் இணைய தளங்களிலிருந்து “டெஸ்க்டொப் அறிவித்தல்” Notifications களைக் காண்பிக்க வேண்டுமா என அடிக்கடி எமக்குத் தொல்லை தரும். குறிப்பாக செய்தி மற்றும் வணிகம் சார்ந்த தளங்களிலிருந்தே இவ்வாறான அறிவித்தல்கள் வரும். இந்த அறிவித்தலை ஏற்றுக் கொண்டால் டெஸ்க்டொப்பில் அவ்வப்போது அந்த தளங்கலிருந்து புதிய அறிவித்தல்களைக் காண்பிக்கும். அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தொல்லை தந்து கொண்டேயிருக்கும்.

இந்த அறிவித்தல் தொல்லையை நிறுத்தும் வசதி வெப் பிரவுசரிலேயே தரப்படுள்ளது.

கூகில் குரோம் பிரவுஸரில் வலது பக்க மேல் மூலையிலுள்ள மூன்று புள்ளிகளுடன் கூடிய மெனு பட்டன் க்ளிக் செய்து Settings தெரிவு செய்யுங்கள். செட்டிங்ஸ் பக்கத்தில் கீழே காணப்படும் Show Advanced Settings க்ளிக் செய்யுங்கள். அங்கு Privacy பகுதியில் Content Settings  க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Do not allow any site to show notifications. என்பதைத் தெரிவு செய்து Done க்ளிக் செய்யுங்கள். இனிமேல் கூகில் க்ரோமில் அறிவித்தல் தொல்லை இல்லை.

பய பொக்ஸ் Mozilla Firefox பிரவுஸரில் இந்த அறிவிப்புக்களை நிறுத்தும் வசதியை நேரடியாக வைக்காமல் சற்று மறைத்தே வைத்துள்ளார்கள். அதனை அணுக முகவரி பட்டையில் about:config  என டைப் செய்து Enter விசையைத்ய் தட்டுங்கள். அப்போது ஒரு எச்சரிக்கைச் செய்தி தோன்றும். அப்போது “I accept the risk” என்பதை க்ளிக் செய்து தொடருங்கள். ஆடுத்து தேடல் பெட்டியில் notifications என டைப் செய்து தேடுங்கள். தோன்றும் தெரிவுகளில் dom.webnotifications.enabled என்பதன் மீது இரட்டை க்ளிக் செய்யுங்கள். இது அத்தெரிவை false நிலைக்கு மாற்றிவிடுவதோடு. பிரவுஸர் அறிவித்தல்கள் தடுத்து நிறுத்தப்படும்.