Encryption என்றால் என்ன?


என்க்ரிப்சன் என்பது தரவுகளை பிறரால் கண்டறியப்பட முடியாத வேறொரு வடிவத்திற்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கிறது. இது பொதுவாக அதிக உணர் திறன் மிக்க (sensitive) தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயெ பயன் படுத்தப்படுகிறது. டேட்டாவை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் அதிகாரம் பெற்ற நபர்கள் மாத்திரமே அதனைப் பார்க்க முடியும். இந்த டேட்டா என்பது எமது கணினியின் தேக்கச் சாதனங்களில் தேக்கி வத்திருக்கும் பைல்களாவோ அல்லது வலையமைப்பு மற்றும் இணையத்தினூடாக அனுப்பப்படுபவையாகவோ இருக்கலாம்.

ஒரு பைல், போல்டர் அல்லது முழுமையான ஹாட் டிஸ்க் பாட்டிசனையும் GnuPG , AxCrypt போன்ற கருவிக ளைப் பயன் படுத்தி என்க்ரிப்ட் செய்யலாம். பைல்களைச் சுருக்குவதற்காகப் பயன் படும் 7-Zip எனும் கருவியையும் கூட என்க்ரிப்ட் செய்யப் பயன் படுத்த முடியும்.



என்க்ரிப்ட் செய்யப்பட்ட பைல் வழமையான தோற்றத்தில் காணப்படாது. அந்த பைலைத் திறந்து பார்ப்பதற்கு முதலில் அதனை டிக்ரிப்ட் (decrypt) செய்ய வேண்டும்.. ஒரு பாஸ்வர்டை வழங்கியே டிப்க்ரிப் செய்ய முடியும். இந்த பாஸ்வர்ட் அந்த பைலை அணுக அதிகாரம் பெற்றவர்கள் மாத்திரமே அறிந்தவர்களாயிருப்பர்,

இணையத்தில் கடத்தப்படும் உணர் திறன் மிக்க டேட்டா என்க்ரிப்ட் செயப்பட்டே அனுப்பப்படுகிறது. அதேபோல் வைபை எனும் கம்பியில்லா தொடர்பாடலிலும் டேட்டா WEP எனும் என்க்ரிப்சன் முறை பயன் படுத்தப்படுகிறது.

பல இணைய தளங்கள் மற்றும் ஓன்லைன் சேவைகள் வழங்கும் நிறுவனங்களும் என்க்ரிப்ட் தொழிநுட்பத்தைப் பயன் படுத்துகின்றன.. உதாரணமாக “https://” என ஆரம்பிக்கும் இணைய தளங்கள் SSL (Secure Sockets Layer)  எனும் என்க்ரிப்ட் முறையைப் பின்பற்றுகின்றன. இதன் மூலம் அந்த சேவையை வழங்கும் சேர்வர் கணினிக்கும் உங்கள் கணினி வெப் பிரவுசருக்கும் இடையில் நடைபெறும் டேட்டா பரிமாற்றம் பாதுகாப்பாக நடை பெறுகிறது. மேலும் மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் கூட டேட்டாவை என்க்ரிப்ட் செய்தே பரிமாறுகின்றன.


'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();