உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதி  தற்போது  தமிழிலும் 



Google Translate  அண்ட்ரொயிட்  செயலியில் தற்போது  ஓஃப்லைன் (offline)  மொழிபெயர்ப்பு மற்றும் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியை  கூகுள் தமிழ் மொழியிலும் வழங்க ஆரம்பித்துள்ளது.

ஓஃப்லைன் மொழிபெயர்ப்பின் மூலம் , இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக்கூடியதாய் இருக்கிறது.  இணைய  வசதி இல்லாத இடங்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.எனினும் இந்த  ஓஃப்லைன் டிரான்ஸ்லேட்டர்ரில் சொற்களை  வாக்கியங்களை முழுமையாக   தட்டச்சு செய்யும் படி பயனரைக் கேட்கும்.  ஓன் லைன் ட்ரான்ஸ்லேட்டர்  போன்று சொல்லில் பாதி டைப் செய்ததும் சொல்லை முழுமையாக்கும்  உதவிகள்  கிடைக்காது.

உடனடி கேமரா டிரான்ஸ்லேஷன் என்பது  ஆங்கிலத்தில்  இருக்கும்  எந்தவொரு    டைப் செய்யப்பட்ட பகுதியையும் (text), நோக்கி  ஸ்மாட் ஃபோன் கேமராவைப் பிடிக்கும் போது   .உடனே இந்த கூகில் ட்ரான்ஸ்லேட்டர் செயலி  அந்த உரைப் பகுதியைத் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும.   எனினும் ஓஃப்லைனில் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியானது  உரைப்பகுதி  ஆங்கிலத்தில் இருந்தால் மட்டுமே செயற்படுகிறது. .தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றாது.

Google Translate  ஓஃப்லைன் மொழிபெயர்ப்பிற்கான கோப்புகளை தற்போது  ப்லே  ஸ்டோரிலிருந்து  பதிவிறக்கம் செய்யலாம்.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();