என்ன இந்தக் கேப்ச்சா - CAPTCHA?


 இணையம் தளங்களைப் பார்வையிடும்போது நாம் அடிக்கடி  காண்பவறறில்; விடயங்களில் கேப்ச்சா (CAPTCHA)  சோதனையும் அடங்கும். ஒரு ஆன்லைன் கணக்கை உருவாக்கும் போதோ, சமூக வலைத்தளங்களில் பின்னூட்டமிடும்போதோ அல்லது  ஒரு படிவத்தை நிரப்பும் போதோ CAPTCHA சோதனைகள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு என்னவென்று  பலரும் அறிந்திருப்பதில்லை.

கேப்ச்சா என்பது ஏதாவது ஒரு இணையத்தில் கணக்கொன்றை உருவாக்கும் போது  தரவு உள்ளீடு செய்வது கணினி செய்நிரல் அல்ல உண்மையிலேயே மனிதர்தான் என்பதை உறுதி செய்யப் பயன்படும் ஒரு செய்நிரலாகும்.

கேப்ச்சா சோதனைகளில்  படமொன்றைக் காண்பித்து  அதிலுள்ள எழுத்துக்களை  உள்ளீடு செய்யுமாறு  பயனனர; கேட்கப்படுகிறார். அப் படத்தில் காண்பிக்கப்படும் ஆங்கில எழுத்துக்கள்  வழமையான் வடிவத்தில் இல்லாமல் சிதைந்த  வடிவில் (distorted text)  காணப்படும். எழுத்துக்கள் சரிவாகவும்  அலை  வடிவிலும் இருக்கும். சில வேளை எழுத்துக்கடாக கோடுகளும்   செல்வதைக் காண்லாம்.  இவ்வாறான எழுத்துக்களை மனிதக் கண்களால் மட்டுமே கண்டறிய முடியும் என்பதுடன்  ஒரு தானியங்கி கணினி செய்நிரலால்  அவற்றைக் கண்டறிவது  சாத்தியமற்றது. (சில கேப்ட்சாக்கள் மனிதர்களால் கூட அடையாளம் காண முடியாதபடி சிதைந்து இருக்கும்.)

அதிர்ஷ்டவசமாக, சில கேப்ட்சா சோதனைகளில் எழுத்துக்களைக் கண்டறிய  மிகவும் கடினமாக இருந்தால் மீண்டும் வேறொரு படத்தை உருவாக்க பயனரை அனுமதிக்கின்றன. சிலவற்றில் செவிவழி உச்சரிப்பு (audio captcha)  அம்சமும் அடங்கும்.

கேப்ட்சா மூலம்,  போட்ஸ்கள் - bots எனப்படும்  சிறிய தானியங்கி நிரல்களால் ஆன்லைனில் படிவங்களை நிரப்புவதைத் தடுக்கப்படுவதோடு வலைத்தள படிவங்கள் மூலம் ஸ்பேம்  போன்ற தேவையற்ற குப்பை அஞ்சல்கள் அனுப்பப்படுவதையும் தடுக்கப்படுகிறது. சில இணைய தளங்களில் பயனர்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதைத் தடுக்கவும்  கேப்ட்சாக்கள் பயன்படுத்தப்படுகின்றன

இருப்பினும், கணினிகள் ஒரு எளிய கேப்ட்சாவைப் படிப்பது மற்றும் AI  (Artificial Intelligence) எனும் செயற்கை நுன்னறிவு மற்றும்  எழுத்து வடிவங்களைக் கண்டறியும் OCR தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால் இப்போது  இந்த கேப்ச்சாக்களைக் கண்டறிவதும் bots எனும் செய்நிரல்களுக்கு கடினமான செயலாகத் தெரிவதிவல்லை

இதன் காரணமாக கேப்ச்சா உருவாக்கத்திலும் பல் வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள். சில படங்களைக் காண்பித்து அப் படங்கள் சார்ந்த ஒரு கேள்வியைப் பயனரிடம் கேட்பதும் அவர்றில் ஓர் உத்தியாகும். 

கூகிள் நிறுவனமும்  சில வருடங்களுக்கு முன்னர்  ஒரு கேப்ச்சா தொழில் நுட்பத்தை  அறிமுகப்படுத்தியது,  நோ-கேப்ட்சா ரீ கேப்ச்சா No CAPTCHA reCAPTCHA  எனும் பெயர் கொண்ட இத்தொழில்நுட்பம் கேப்ட்சா சவால்களை மேலும் எளிதாக்கியுள்ளது. இங்கு படங்கள், எழுத்துருக்கள் மற்றும் ஆடியோ எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக பயனரின் சுட்டி எவ்வாறு நகரும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

கேப்ட்சாக்கள் பயனருக்கு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் தானியங்கு நிரல்களைத் தடுப்பதன் மூலம் இணைய தளங்களை நிர்வகிக்கும் வெப்மாஸ்டர் எனப்படுவோர்க்கு மிகுந்த பயனை அளிக்கின்றன.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();