How to create a folder without a name
பெயரில்லாமல் ஒரு போல்டர்!
நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.
முதலில் போல்டர் ஒன்றை உருவாக்க்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் 'alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255' ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி. இந்த பெயரிடப்படாத போல்டரை வைத்து என்ன செய்யலாம்? அதுதான் எனக்கும் புரியவில்லை.
-அனூப்-