What is Document Scrap ?


Document Scrap தெரியுமா?

எம்.எஸ்.வர்ட் ஆவணமொன்றைத் ஒன்றைத் திறந்து பணியாற்றுகிறீர்கள். அதிலலுள்ள உரையில் (text) ஒரு பகுதியைத் தெரிவு செய்து வேறொரு ஆவணத்தில் அல்லது வேறொரு எப்லிகேசனில் பயன்படுத்த நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கொப்பி / பேஸ்ட் கட்டளையைப் பிரயோகிக்க வேண்டியதில்லை. உரைப் பகுதியைத் தெரிவு செய்து அதனை ட்ரேக் செய்து அப்படியே டெஸ்க் டொப்பில் போட்டு விடுங்கள். அந்தப் பகுதி டொக்யுமெண்ட் ஸ்க்ரேப் எனும் பெயரோடு டெஸ்க் டொப்பில் சேமிக்கப்பட்டுவிடும். இவ்வாறு உங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் தெரிவு செய்து டெஸ்க்டொப்பில் ட்ரேக் செய்து விடுங்கள்.

பின்னர் அவற்றைப் பிரதி செய்து கொள்ள வேண்டிய எப்லிகேசனைத் திறந்து டெஸ்க்டொப்பிலுள்ள ஸ்க்ரேப் பைலை அந்த எப்லிகேசனில் ட்ரேக் செய்து போட்டு விடுங்கள். அவ்வளவு தான். எப்லிகேசன் மென்பொருளிலிருந்து டெஸ்க்டொப்பிற்கு ட்ரேக் செய்யும் போதும் டெஸ்க்டொப்பிலிருந்து எப்லிகேசன் மென்பொருளுக்கு ட்ரேக் செய்யும் போதும் எப்லிகேசன் விண்டோவின் அளவை சிறிதாக்கிக் (resize) கொள்ள வேண்டும் என்பதை மற்ந்து விடாதீர்கள். அத்தோடு இந்த செயற்பாட்டை எம்.எஸ்.வர்டில் மாத்திரமின்றி எந்தவொரு எப்லிகேசன் மென்பொருளிலும் செயற்படுத்த்லாம் என்பதயும் நினைவில் கொள்ளுங்கள்.

-அனூப்-