‘Google‘ search tips


‘Google‘  தேடல் ரகசியங்கள்!

இணைய தேடல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கூகில் எனும் (Search Engine) தேடற்பொறிதான். இணைய பயனர்களிடையே மிகப் பிரபல்யம் வாய்ந்த தேடற் பொறியாக கூகில் திகழ்கிறது. எனினும் கூகிலைப் பயன்படுத்தி மிகச் சிலரே தமது தேடலை முறையாக மேற் கொள்கிறார்கள் எனலாம். கூகில் தேடற் பொறியில் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தேடிப் பெற எத்தனையோ இலகு வழிகள் இருக்க நாம் ஒரு தேடற் சொல்லை (keyword) மட்டும் டைப் செய்து விட்டு பக்கம் பக்கமாகத் தேடித் தேடிக் களைத்துப் போய் விடுவதோடு நேரத்தையும் வீணாக்கி விடுகிறோம்.

இணையத்தில் தகவல்களைத் தேடுவதும் ஒரு கலை எனப்படுகிறது. கூகில் தேடற்பொறியில் பயன் படுத்தத்தக்க சில தேடல் நுட்பங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.


1. '+' குறியீடு
இந்தக் குறியீட்டை அடுத்து வரும் தேடற் சொல தேடல் முடிவுகளில் நிச்சயம் இடம் பெறுவதைக் காணலாம். . உதாரணம் : +iPhone and iPod இங்கு தேடல் முடிவில் iPod எனும் சொல் இடம் பெறா விடினும் +iPhone எனும் சொல் நிச்சயம் இடம் பெறும்.

2. '-' குறியீடு
இந்தக் '-' குறியீட்டை அடுத்து வரும் சொல் தேடல் முடிவுகளில் இடம் பெறுவதில்லை. உதாரணம் : -iPhone and iPod இங்கு தேடல் முடிவில் -iPhone எனும் சொல் இடம் பெறாது.

3. ‘’ (pipeline) குறியீடு
இந்தக் குறியீடு ‘அல்லது’ எனும் கருத்தைக் கொடுக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தேடற் சொற்களை வழங்க இதனைப் பயன் படுத்தலாம். உதாரணம் : +iPhone iPod. இங்கு தேடல் முடிவில் iPhone , iPod எனும் இரு சொற்களும் இடம் பெறும்

4. மேற்சொன்ன குறியீடுகளுக்குப் பதிலாக AND,OR,NOT போன்ற பூலியன் குறியீடுகளையும் பயன்படுத்தி சொற்களை இணைத்துத் தேடலாம்.. எனினும் இந்தக் குறியீடுகள் ஆங்கில் பெரிய எழுத்திலேயே (Capital) இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். உதாரணம் : swim OR float எனும் தேடல் swim அல்லது float எனும் வார்த்தைகளடங்கிய தேடலைத் தரும் .

5. '~' (tilde) குறியீடு
இந்தக் '~' குறியீட்டை அடுத்து வரும் சொல்லுக்கு ஒத்த கருத்துள்ள சொற்களும் தேடல் முடிவுகளில் இடம் பெறும்.

6. குறிப்பிட்ட ஒரு இணைய தளத்தை தேடுவதற்கு site எனும் வார்த் தையை உபயோகிக்க வேண்டும். உதாரணம் : site:www.thinakaran.lk

7. ஒரு சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பெற define எனும் வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள். . உதாரணம்: define:Computer

8. ஒரே மாதிரியான விடயங்கள் அடங்கிய இணைய தளங்களைத் தேட related எனும் வார்த்தையை உபயோகிக்க வேண்டும். உதாரணம் related: www.itvalam.blogspot.com/

9. ' * ' எனும் குறியீட்டைப் பயன்படுத்தி ஒரு சொல்லை முழுமையாகத் தெரியாத போது அதன் ஆரம்ப எழுத்துக்ளுடன் சேர்த்துத் தேடலாம். உதாரணம்: friend* . இதன் முடிவுகள், friends, friendship போன்ற சொற்களையும் கொண்டிருக்கும். இதனை wildcard என்பார்கள்..

10. ஒரு சொல்லுக்குரிய (ஆங்கில்) எழுத்துக்களை (spelling) அறியாதபோது அதற்குப் பதிலாக '?' பயன்படுத்தித் தேடலாம். உதாரணம்: fri??d . இங்கு ?? எனும் குறியீடு எந்தவொரு ஆங்கில் எழுத்துக்களையும் கொண்டிருக்கலாம்.

11. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட சொற்றொடரில் தேடல் முடிவுகளில் அந்த வார்த்தைகளை நீங்கள் வழங்கிய அதே ஒழுங்கிலேயே பெற “ “ மேற்கோள் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உதாரணம் "contact us" . இந்த தேடல் முடிவில் contact மற்றும் us எனும் இரு வார்த்தைகளும் ஒன்றாகவே இருக்கக் காணலாம்.

12. cache: எனும் வர்த்தையை சேர்த்துத் தேடும்போது கூகில் தேடற்பொறி குறிப்பிட்ட அந்த இணைய தளத்தை தனது தரவுத் தளத்தில் சேர்க்கும் போது இருந்த நிலையைக் காண்பிக்கும்.

13. link: எனும் வார்த்தை, கொடுக்கப்படும் ஒரு இணைய பக்கத்திலுள்ள அனைத்து இணைப்புகளையும் பட்டியலிடுகிறது.

14. info: எனும் வார்த்தை ஒரு இணைய தளம் பற்றிய விவரங்களை முடிவாகத் தருகிறது. உதாரணம்: info:www.madeena.sch.lk

15. filetype: ஒரு குறிப்பிட்ட வகை பைலை மட்டுமே தேடிப் பெற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். உதாரணம்: internet filetype: pdf

16. Intitle: குறிப்பிட்ட ஒரு வார்த்தையை தலைபபாகக் கொண்ட இணைய பககங்களைத் தேட இந்த வர்த்தையைப் பயன்படுத்த வேண்டும். உதாரணம் Intitle: one stop எனும் சொற்களைத் தலைப்பாகக் கொண்ட இணைய பக்கங் களை வரிசைப் படுத்தும்.

17. குறிப்பிட்ட ஒரு வார்த்தையை தனது இணைய தள முகவரியில் கொண்டிருக்கும் இணைய பககங்களைத் தேட Inurl எனும் வர்த்தையைப் பயன்படுத்த வேண்டும். உதாரணம்: Inurl:nie

18. இரண்டு இலக்கங்களுக்கிடையிலான வீச்சில் தகவல்களைத் தேட #..#எனும் குறியீட்டைப் பயன்படுத்தலாம். உதாரணம்: India presidents 1947.. 2000

19. ஒரு பிரதேசத்தின் வானிலை அறிக்கைகளைப் பெற பின்வருமாறு டைப் செய்து தேடல் வேண்டும். Weather Kurunegala, Sri Lanka

20. இணையத்தில் புத்தகங்களைத் தேட Books about Health, Books about Water என வழங்கலாம்.

21. Phonebook : எனும் வார்த்தையுடன் ஒரு தொலைபேசி இலக்கத்தை வழங்கி அது யாருக்கு சொந்தமானது எனக்கூடக் கண்டு பிடிக்கலாம். எனினும் இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது.

22. நாணய மாற்றுக் கருவியாகவும் கூகில் தேடற் பொறியைப் பயன்படுத்த லாம். உதாரண்ம். . 1 Pound = ? USD 1 USD = ? Yen

23. கூகில் தேடற் பொறியை ஒரு கல்குலேட்டராக., ஒரு அலகு மாற்றியா கவும் கூட பயன் படுத்தலாம். (படங்களைப் பார்க்கவும்)

· 3+2
· 4-1
· 6*8 முடிவு 48
· 5+5*10.5
15/5 முடிவு 3
3^2 முடிவு 9 (அடுக்கு)
5%2 முடிவு 1 (மீதி)
sqrt(25) முடிவு 5

தமிழிலும் கூட கூகிலில் தேடலாம் .அதற்கு யுனிகோட் முறையிலமைந்த எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும்.

மேற் சொன்னவை தவிர மேலும் பல தேடல் நுட்பங்கள் கூகிலில் உள்ளன. அவற்றை நீங்க்ளாகவே தேடுங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

-அனூப்-