A useful Windows Registry tip
பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..
இன்று ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்து பார்க்க ஒரு சிறிய உதவிக் குறிப்பை வழங்கலாம் என நினைக்கிறேன். இது ஒரு உபயோகமான குறிப்பு. இதன் மூலம் எந்த ஒரு பைல் அல்லது போலடர் மீதும் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கன்டெக்ஸ்ட் மெனுவில் Copy To Folder மற்றும் Move To Folder எனும் கட்டளைகளை தோன்றச் செய்யலாம். அதன் மூலம் பைல், போல்டர்களை விரும்பிய இடத்திற்குப் இலகுவாகப் பிரதி செய்து கொள்ளவோ அல்லது நகர்த்த்வோ முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
முதலில் ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து (+) குறியீட்டில் க்ளிக் செய்து HKEY_CLASSES_ROOT என்பதை விரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு (+) குறியீட்டில் க்ளிக் செய்து AllFilesystemObjects → shellex → ContextMenuHandlers வரை விரித்துக் கொள்ளுங்கள். அடுத்து ContextMenuHandlers மேல் ரைட் க்ளிக் செய்து New → Key தெரிவு செய்யுங்கள். அப்போது போல்டர் அமைப்பில் ஒரு புதிய கீ தோன்றக் காணலாம். அதற்கு Copy To Folder என பெயரிட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனைத் தெரிவு செய்து விண்டோவின் வலப் புறம் உள்ள default எனும் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து Modify தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் பெட்டியில் Value Data எனும் பகுதியில் {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} எனும் பெறுமானத்தை டைப் செய்து ஓகெ சொல்லி ரெஜிஸ்ட்ரி எடிட்டரை மூடி விடுங்கள். அவ்வளவு தான். இப்போது ஒரு பைல் அல்லது போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்ய Copy To Folder எனும் கட்டளையும் தோன்றக் காணலாம். இதே வழியிலேயே Move To Folder எனும் கட்டளையை உருவாக்கலாம். அதற்கு Move To Folder எனும் புதிய கீயை உருவாக்கி அதன் டிபோல்ட் பெறுமானமாக {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} என வழங்குங்கள்.
- அனூப் –