How to recover folder options ?


Folder Options   மீளப்பெறுவது எப்படி?

விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு போல்டரைத் திறந்ததும் அதன் மெனு பாரில் Tools மெனுவின் கீழ் Folder Options எனும் கட்டளை இருப்பதை அவதானித்திருப்பீர்கள். சில வேளை கணினி வைரஸ் தாக்குதலுக்குட்பட்டிருந்தால் இந்தக் கட்டளையை காண முடியாதிருக்கும். இதனால் போல்டரில் மாற்றங்கள் செய்ய முடியாது திண்டாடிய அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

இந்த Folder Options கட்டளையை மீளப் பெற வேண்டுமானால் முதலில் ரன் பொக்ஸில் gpedit.msc என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். அப்போது தோன்றும் Group Policy விண்டோவின் இடது புறம் user configuration - Administrative Templates - windows components - ஊடாக Windows Explorer தெரிவு செய்யுங்கள். அப்போது அந்த விண்டோவின் வலப்புறம் Removes the Folder Options menu item from the Tools menu எனும் கட்டளையைக் காணலாம். அதன் மேல் ரைட் க்ளிக் செய்து properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் செட்டிங்ஸ் டேபின் கீழ் Disabled என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்.

-அனூப்-