How to recover MS-Office Settings ?
MS-Office இல் Settings மீளப்பெறுவது எப்படி?
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் பொதியைப் பயன் படுத்தும் நீங்கள் வர்ட், எக்ஸல் போன்ற மென்பொருள்களில் பல மாற்றங்களை அவ்வப்போது உங்கள் வசதிக்கேற்ப செய்திருப்பீர்கள். உதாரணமாக நீங்கள் எம்.எஸ்.வர்டில் Auto Correct, Themes, Toolbars, Dictionaries, Signatures, Email Account Profiles, Security Preferences போன்ற வற்றில் பல மாற்றங்களைச் செய்திருக்கலாம். . இவ்வாறு செட்டிங்ஸில் பல மாற்றங்களைச் செய்து பணியாற்றி வரும் வேளையில் திடீரென உங்கள் கணினி பழுதடைந்து விட்டாலோ அல்லது ஒபிஸ் மென்பொருளை மறுபடி நிறுவ வேண்டி ஏற்பட்டாலோ அல்லது புதிய கணினிக்கு மாறிவிட்டாலோ நீங்கள் செய்த செட்டிங்ஸ் அனைத்தையும் மறுபடியும் உருவாக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்த செட்டிங்ஸ் அனைத்தையும் மீளப்பெறும் வசதி எம்.எஸ்.ஒபிஸ் மென்பொருளில் இணைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் நீங்கள் செய்த மாற்றங்களை முன்கூட்டியே ஒரு பைலில் சேமித்து விட்டு அந்த பைலிருந்து அதே கணினியிலிலோ அல்லது வேறொரு கணினியிலோ செட்டிங்ஸை மீளப்பெறலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.
முதலில் Start \ Programs \ Microsoft Office \ Microsoft Office Tools ஊடாக Microsoft Office 2003 Save My Settings Wizard தெரிவு செய்யுங்கள்.
அப்போது ஒரு விசர்ட் தோன்றி உங்களை வழி நடாத்தும். அதில் Next க்ளிக் செய்து வரும் விண்டோவில் Save the settings from this machine என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்.
அப்போது தோன்றும் விண்டோவில் உங்கள் செட்டிங்ஸ் அனைத்தையும் ஒரு பைலாக சேமிக்க வெண்டியு இடத்தைக் காண்பித்து விட்டு Finish பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
இந்த பைல் சேமிக்கப்படும் இடத்தை நினைவில் வைத்திருங்கள். ஏனெனில் மறுபடி இதே விசர்ட் மூலம் செட்டிங்ஸை மீளப் பெற அந்த பைல் இருக்கும் இடத்தைக் காண்பிக்க வேண்டியிருக்கும்.
செட்டிங்ஸ் அனைத்தும் சேமிக்கப்படும் செயற்பாடு முடிவடைந்ததும் Exit பட்டனில் க்ளிக் செய்யுங்கள். .எஸ்.ஒபிஸ் செட்டிங்ஸ் அனைத்தையும் ஒரு புதிய கணினிக்கு மாற்றுவதாயின் அந்த பைலை ஒரு பென் ட்ரைவில் ஏற்றிக் கொள்ளுங்கள். புதிய கணினியில் உங்கள் செட்டிங்ஸை மீளப்பெறுவதற்கு முன்னர் மேற் சொன்ன அதே வழியில் சென்று அதே விஷ்ர்டைத் திறந்து அங்கு Restore previously saved settings to this machine என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டங்களுகுச் செல்லுங்கள். சில வினாடிகளில் எம்.எஸ்.ஒபிஸ் மீள ஒழுங்கமைக்கப்படும்.