What is Zip folder

பைல்கலைச் சுருக்கும் ஷிப் போல்டர் 

இணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் ஷிப் பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்ஷர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு வசதி எனலாம்ஏனெனில் இந்த ஸிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட பறிமாற முடிகிறது. அத்தோடு புலொப்பி டிஸ்க் மற்றும் பென் ட்ரைவ் போன்ற ஊடகங்களில் ஒரு பைலை சேமிக்கப் போயதிய இடமில்லாதபோது அதனை ஷிப்; பைலாக சுருக்கிச் சேமிக்க முடிகிறது.

பைல்களைச் சுருக்கவென WinZip,  WinRar, 7Zip என ஏராளமான (File Compression) கம்ப்ரெஸ் ஸன் மென்பொருள்கள் பாவனையில் இருந்தாலும் விண்டோஸுடன் இணைந்து வருவும் ஒரு யூட்டிலிட்டியே இந்த ஸிப் போல்டர்.

ஷிப் போல்டர் (Zip Folder) என்பது பைல் அல்லது போல்டர்களின் அளவைச் சுருக்கிப் பதியும் முறையாகும். வழமையான போல்டர்கள் போலன்று இந்த ஷிப்; போல்டரானது குறைந்தளவு இடத்தை எடுத்துக் கொள்வதோடு ஒரு வலை யமைப்பில் அல்லது இணையத்தில் பைகளை இலகுவாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. அத்துடன் ஷிப்; போல்டருக்குள் இருக்கும் ஒரு பைலையோ அல்லது இன்னுமொரு போல்டரையோ வழமையான பைல் அல்லது போல்டர் போன்றே கையாளவும் முடியும்.

ஒரு ஷிப்; போல்டரை உருவாக்கிய பின்னர் அதற்குள் பைலை அல்லது போல்டரை இழுத்துப் போடுவதன் மூலம் அதனை சுருக்கிட முடிவதோடு அதனை நேரடியாகவே திறக்கவும் முடியும். விரும்பினால் சுருங்கிய பைலை விரிவடையச் செய்தும் உபயோகிக்க முடிகிறது.

ஒரு சுருங்கிய பைலை அல்லது போல்டரை விரிவடையச் செய்யாமல் நேரடியாகவே உபயோகிக்க முடிந்தாலும் கூட அந்த பைலானது ஏனைய பைல்களில் தங்கியிருந்தால் அதனை விரிவடையச் செய்தே உபயோகிக்க வேண்டும்.

ஷிப்; போல்டர்களை உங்கள் கணினியில் எந்த ஒரு ட்ரைவுக்கும் அல்லது போல்டருக்கும் இலகுவாக நகர்த்த முடியும். அத்துடன் ஒரு வலையமைப்பில் பணியாற்றும் போது ஏனைய பயனர்கள் பைல்களைச் சுருக்கவென வின்ஸிப் போன்ற வேறொரு மென்பொருளை உபயோகித்தாலும் கூட அவர்களுடனும் இந்த ஷிப்; போல்டர்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.மேலும்  ஷிப்; போல்டர்களை எமது அனுமதியில்லாமல் அடுத்தவர்கள் திறந்து பார்க்க விடாமால் பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கவும் முடிகிறது.

அதேவேளை வின்ஸிப் வின்ரார் போன்ற சுருக்கிப் பதியக் கூடிய மென்பொருள்களை கணினியில் நிறுவும் போது விண்டோஸுடன் வரும் ஷிப்; போல்டர் மறைந்து நீங்கள் நிறுவிய பிற கம்ப்ரெஸ்ஸன் மென்பொருளே இயங்கு நிலைக்கு மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷிப்  போல்டரை எவ்வாறு பயன் படுத்துவது?

முதலில் ஒரு ஷிப்  போல்டரை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக டெஸ்க்டொப்பில் உருவாக்க, டெஸ்க்டொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் கன்டெக்ஸ்ட் மெனுவில் நேற தெரிவு செய்து அதிலிருந்து வரும் சப் மெனுவில் Compressed (zipped) Folder என்பதைத் தெரிவு செய்ய ஒரு ஸிப் போல்டர் டெஸ்க்டொப்பில் உருவாவதைக் காணலாம். பின்னர் நீங்கள் சுருக்க வேண்டிய பைல்களையோ அல்லது போல்டரையோ அதற்குள் பிரதி செய்து விடுங்கள் அல்லது ட்ரேக் செய்து இழுத்துப் போடுங்கள். அவ்வளவுதான். இப்போது அதன் பைல் அளவானது கணிசமாகக் குறைந்திருப்பதை அவதானிக்கலாம். அடுத்து ஸிப் போல்டருக்குள் இருக்கும் பைல்களைத் திறப்பதானால் மேலே கூறியது போல், வழமையான முறையிலேயே திறக்கலாம்.

எனினும் அந்த சுருங்கிய பைல்களை விரித்து உபயோகிக்க வேண்டுமானால் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.


ஷிப்; போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Extract All தெரிவு செய்ய ஒரு விசர்ட் வந்து உங்களை வழி நடத்தும். அந்த விசர்டில் முதலில் நெக்ஸ்ட் க்ளிக் செய்யுங்கள். பின்னர் வரும் இரண்டாவது கட்டத்தில் எவ்விடத்தில் பவிரிவடைச் செய்யப்போகும் பைல்களைச் சேமிக்க வேண்டும் என்பதை பிரவுஸ் பட்டனில் க்ளிக் செய்து காட்டி விட்டு மீண்டும் நெஸ்ட் க்ளிக் செய்ய அடுத்த கனமே அந்த பைல்கள் விரிக்கப்பட்டுவிடும்.

-அனூப்-