What is Android?

Android என்றால் என்ன? 
இன்றைய கையடக்கத் தொலைபேசிகள் வெறும் தொலைபேசி உரையாடல் வசதி மட்டுமன்றி ஏராளமான பலவேறு வசதிகளையும் சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஸ்டில் கேமரா. வீடியோ கேமராபாடல்களைச் செவி மடுக்கக் கூடிய மியூசிக் ப்லேயர்ஒலிப்பதிவுக் கருவி,வானொலிப் பெட்டிதொலைக் காட்சிப் பெட்டிகல்குலேட்டர்டேப்லட் கணினி என பல்வேறு சாதனங்கள் வழங்கக் கூடிய வசதிகளை ஒரே கையடக்கத் தொலைபேசி தன்னகத்தே கொண்டுள்ளது .

இவ்வாறு பல் பல்வேறு வடிவங்களை எடுத்து வரும் கையடத் தொலைபேசிகள புதிய தொழிட் நுடங்கள் அறிமுகமாகும்போது அவற்றை உள்வாங்கி அதற்கேற்றாற்போல் புதிய இயங்குதளங்கள்புதிது புதிதாக பயன் பாட்டு மென்பொருள்களை உருவாக்க வேண்டிய கட்டாயமும் கையடக்கத் தொலைபேசித் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்படுகிற்து.
கடந்த 15 வருட காலத்தில் கையடக்கத் தொலைபேசிகளுக்கான இயங்கு தளங்கள் பல மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றன. ஆரம்ப கால சாதாரண கையடக்கத் தொலை பேசியிருந்து தற்போதைய ஸ்மாட் போன் (Smart Phone) வரைக்கும் பல இயங்கு தளங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. குறிப்பாக 1996 களில் இருந்த Palm OS ஆனது பின்னர் 2000ஆண்டளவில் விண்டோஸ் பொக்கட் பீசி இயங்கு தளம் என் வளர்ச்சியைக் கண்டது. பின்னர்  Symbian, Blackckberry OS, iOS, Android. OS என பல கையடக்கத் தொலைபேசி இயங்கு தளங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

இன்றைய கையடக்கக் கணினிகளில் பரவலாகப் பயன் படுத்தப்பட்டு வரும் ஒரு இயங்கு தளமே அன்ட்ரொயிட். இந்த அன்ட்ரொயிட் என்பது வெறும் இயங்கு தளமாக மட்டுமன்றி பல பயன் பாட்டு மென்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. டெஸ்க் டொப் கணினிகளில் விண்டோஸ் இயங்கு தளம் நிறுவிப் பயன் படுத்துவது போன்று கையடக்கக் கணினிகளில் பயன்படுத்தப் படுவதே இந்த அன்ட்ரொயிட். இதனை கூகில் நிறுவனம் விருத்தி செய்கிறது. இன்று வரை பல பதிப்புக்கள அன்ட்ரொயிட் கண்டிருக்கிறது.
அன்ட்ரொயிட் இயங்கு தளத்தின் வரலாற்றை சற்று நோக்கினால் முதன் முதலில்
 2003 ஆம் ஆன்டில் அன்ட்ரொயிட் இயங்கு தளம் உருவாக்கப்பட்டது. இதனை அமெரிக்கர்களான Andy Rubin, Rich miner, Nick sears மற்றும் Chris White ஆகியோர் இணைந்து Android Inc . எனும் நிறுவனத்தை ஆரம்பித்து அன்ட்ரொயிட் கையடக்கக் கருவிகளுக்கான இயங்கு தளத்தை விருத்தி செய்தார்கள்பின்னர் இதனை கூகில் நிறுவனம் 2005 ஆம் ஆண்டில் தன் வசப் படுத்திக் கொண்டது. அன்ட்ரொயிட் இயங்கு தளம் அரம்பத்தில் இருந்தது போலல்லாமால் தற்பொது பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது.
அன்ட்ரொயிட் இயங்கு தளமானது லினக்ஸ் எனும் திறந்த மூல மென்பொருளின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது. எனினும் கூகில் நிறுவனமும் அந்தக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் இப்போது செய்துள்ளது.
முதன் முதலில் அன்ட்ரொயிட் இயங்கு தளம் நிறுவப்பட்டு வெளிவந்த கையடக்கத் தொலைபேசிகளளாக HTC மற்றும் T-Mobile நிறுவனத் தயாரிப்புகளைக் குறிப்பிடலாம். தற்போது கையடக் தொலை பேசிகள் தயாரிக்கும் பல நிறுவனகள் அன்ட்ரொயிட் இயங்கு தளத்தைப் பயன் படுத்துகின்றன. அவற்றில் ALCATEL, LG, Motorola, Samsung, Sony Ericsson போன்றவற்றைக் குறிப்பிடலாம். அன்ட்ரொயிட் இயங்கு தளம் ஒரு கையடக்கத் தொலை பேசிக்கு அவசியமான அடிப்படையான அப்லிகேசன்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் கூகில நிறுவனம் தனது சேவைகளனா Gmail, Google Maps, YouTube, போன்ற பிற சேவைகளயும் அன்ட்ரொயிடுக்காக வழங்கு வருகிறது.

எல்லா ஸ்மாட் போன்கள் போன்று அன்ட்ரொயிட் போன்களும் மூன்றாம் தரப்பு பயன் பாட்டு மென்பொருள் கள் (Apps) மற்றும் விளையாட்டுக்களைத் தரவிறக்கிப் பயன் படுத்தக் கூடிய வசதியைத் தருகின்றன. இவற்றை இலவசமகவோ பனம் செலுத்தியோ டவுன்லோட் செய்து பயன் படுத்தலாம் Android Market (play store) எனப்படும் இந்த இணைய சந்தையில் பல்லாயிரம் எப்லிகேசன்கள் தற்போது கிடைக்கின்றன. இவற்றின் மூலம் உங்கள் கையடக்கத் தொலைபேசியை மேலும் மெருகூட்டலாம்.

இந்த அப்லிகேசன்களில் பேஸ்புக்ஸ்கைப் உரையாடல்வர்ட் எக்ஸல் போன்ற ஆவணங்களை உருவாக்கல்மற்றும் எண்ணிலடங்கா கணினி விளையாட்டுக்கள் போன்றன அடக்கம். தற்போது கூகில் நிறுவனம் அன்ட்ரொயிட் கருவிகளுக்காக கூகில் பலே எனும் புதிய சேவையை அறிமுகப் படூதியுளது. இது முன்னர் இருந்த அன்ட்ரொயிட் சந்தைக்கான (Android Market) மாற்றீடாகும்.

விண்டோஸ் இயங்கு தளம் விண்டோஸ்
 3.11 லிருந்து விண்டோஸ் 95, வினண்டோஸ் எக்ஸ்பீவிஸ்டா விண்டோஸ் செவன் என பல பதிப்புக்களைக் கண்டது போல் கூகில் நிறுவனமும் அன்ட்ரொயிடின் பல பதிப்புக்களைக் அவ்வபோது வெளியிட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு புதிய பதிப்புக்கும் வெவ்வேறு பெயர்களை ஆங்கில் அகர வரிசைப்படி வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது.

Android Versions
அன்ட்ரொயிட் இயங்கு தளத்தின் புதிய பதிப்பாக Jelly Bean 4.2, எனும் பெயரில் வெளி வந்துள்ள்து அன்ட்ரொயிட் புதிய பதிப்புக்கென எப்லிகேசன்களை உருவாக்குவோருக்கும் developers மேலும் வசதிகளை கூகில் ஏறபடடுத்திக் கொடுத்துள்ள்து. அன்ட்ரொயிட் இயங்கு தள்த்திற்கான எப்லிகேசன்கள் மிகப் பிரபலமான ஜாவா எனும் கணினி நிரலாக்க மொழி கொண்டு உருவாகக்கப் படுகின்றன.

கூகில் நிறுவனம் அன்ட்ரொயிடை தன் வசம் எடுத்துக்
 கொண்டாலும் அதனை ஒரு திறந்த மூல மென்பொருளாக மாற்றியமைத்து Android open-source project எனும் பெயரில் மேலும் வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் செயற்பட்டு வருகிறது.  அன்ட்ரொயிடுக்குப் போட்டியாக சந்தையில் இன்னும் பல இயங்கு தளங்கள் உள்ளன. ஆப்பிள் நிறுவனத் தின்  iOS மற்றும்  சிம்பியன்மைக்ரொஸொப்ட் நிறுவனத்தின் Windows mobile என்பன அன்ட்ரொயிடுக்குப் பலத்த போட்டியைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு அன்ட்ரொயிட் பதிப்புக்களுக் கும் (Versions) பெயராக ஆங்கில அகர வரிசைப்படி உணவுப் பண்டங்களின் பெயர்களை சூட்டியிருப்பதை அவதானியுங்கள்

அன்ட்ரொயிட் பதிப்புகள்
  • Cupcake:
    Android 1.5

  • Donut:
    Android 1.6

  • Eclair:
    Android 2.0,  2.0.1  Android 2.1

  • Froyo:
    Android 2.2,

  • Gingerbread:
    Android 2.3,

  • Honeycomb:
    Android 3.0, Android 3.1  Android 3.2

  • Ice Cream Sandwich:
    Android 4.0
  • Jelly BeanAndroid 4.1
  • Kit kat
    Android 4.4
  • Lolly Pop
    Android 5

-அனூப்-