Difference between Optical Zoom and Digital Zoom

Optical Zoom- Digital Zoom என்ன வேறுபாடு?

டிஜிட்டல் கேமரவில் digital zoom ,  optical zoom என இரு வகையான உருப் பெருக்க வசதிகள் காணப்படுகின்றன. சில கேமராக்களில்  இவ்விரு வசதிகளும் காணப்படும். 5x, 10x,  20x. அளவுகள் கேமராவில் குறிப்பிடப் பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இது சூம் செய்யக் கூடிய அளவையே குறிக்கிறது. ஆனால் கேமரா வாங்க விரும்பும் பலர்  இந்த சூம் வசதி பற்றி  அக்கறை காட்டுவதில்லை..

டிஜிட்டல் சூம் எனப்படுவது அடிப்படையில் கேமராவில் அப்போது உள்வாங்கப் பட்ட  காட்சியின் ஒரு பகுதியையே பெரிதாக்கிக் காட்டப் படுகிறது. இது அக் காட்சியின் கிட்டிய உண்மையான நிலையல்ல. மேலும் அப்படத்தின் முழுமையான் அளவின் தெளிவுத் திறனிலும் (resolution) பார்க்கக் குறைந்த தெளிவுத் திறனுடனேயே அது பதிவாகிறது.  டிஜிட்டல் சூம் செய்வதை போட்டோ எடிட்டிங் மென்பொருளொன்றில் ஒரு படத்தின் பகுதியைப் பெரிதாக்கும் செயற் பாட்டிற்கு நிகரானது எனலாம். இதனை கேமரா தயாரிக்கும் நிறுவனத்தின்  ஓர் ஏமாற்று வித்தை என்றாலும் தவறில்லை.

மாறாக ஒப்டிக்கல் சூம் என்பபடுவது கேமரவில் பொருத்தியுள்ள விசேட கண்ணாடி வில்லைகள் (telephoto lens) பயன் படுத்தி தொலைவிலுள்ள காட்சி அருகில் உள்ளவாறு. உருப் பெருக்கம் செய்யப் படுகிறது. இதுவே நிஜமான உருப் பெருக்கமாகும் என்பதுடன் படத்தின் தெளிவுத் திறனிலும்  பாதிப்பை உண்டாக்குவதில்லை.


ஒரு படத்தின் தரத்தை பேன வேண்டுமாயின் முடிந்தளவு டிஜிட்டல் சூம் என்பதைத் தவிர்த்தல் நல்லது.. உங்கள் கேமராவில் இரண்டு வசதிகளும் இருக்கும் பட்சத்தில் ஒப்டிக்கல் சூமையே பயன் படுத்துங்கள். ஒப்டிக்கல் சூம் இல்லையெனின் டிஜிட்டல் சூம் வசதியைப் பயன்படுத்தலாம்.  

-அனூப்-