How long has your PC been working?
உங்கள் கணினி எவ்வளவு நேரமாக இயங்குகிறது?
உங்கள்
கணினி எவ்வளவு நேரமாக இயங்குகிறது
என்பதை அறிய வேண்டுமா? விண்டோஸ்
7 மற்றும் விஸ்டாவில் கணினி இயங்கிய நேரத்தைக்
(uptime) அறிய Taskbar இல் ரைட் க்ளிக்
செய்து Task Manager தெரிவு செய்யுங்கள். தோன்றும்
டயலொக் பொக்ஸில் Performance tab தெரிவு செய்யுங்கள். அங்கு
System பகுதியில் uptime என்பதைப் பார்வையிடுங்கள்.
விண்டோஸ்
எக்ஸ்பியில் கணினி இயங்கிய நேரத்தைக்
காண Run பொக்ஸில் CMD என டைப் செய்து
OK சொல்லுங்கள். அப்போது தோன்றும் கமாண்ட்
ப்ரொம்ப்ட் விண்டோவில் systeminfo என டைப் செய்து
எண்டர் விசையைத் தட்டுங்கள். சிறிது நேரத்தின் பின்னர்
கணினியின் uptime என்ன என்பதைக் காண்பிக்கும்.
அனூப்