Difference between http and https
http / https என்ன வேறுபாடு?
இணையதள
முகவரிகள் பொதுவாக http என
ஆரம்பிக்கும். எனினும் சில இணைய
தளங்கள் https என ஆரம்பிப்பதையும் நீங்கள்
அவதானித் திருக்கலாம் http (Hypertext Transfer Protocol) என்பது இணையம்
வழியே தகவல்களை அனுப்பவும் பெறவும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
சில வரையறைகளாகும். இது
தகவல்கள் விரைவாகவும், இலகுவாகவும் திருத்தமாகவும் தகவல்களைத் தேக்கி வைத்திருக்கும் சேர்வர்
கணினி களிடையேயும் பயனரிடையேயும் பரவுவதற்கு வழி செய்கிறது.
Http என்பது பொதுவாக
html கொண்டு உருவாக்கப் பட்ட வெப் பக்கங்களை
அணுகவே பயன் படுகிறது. எனினும்
இணையத்திலுள்ள வேறு வளங்க ளையும்
Http ஊடாகப் பெற முடியும். சில
நேரங்களில் சேர்வர் கணினிகளின் ஊடாக
கடன் அட்டை விவரங்கள் போன்ற
அந்தரங்கமான விடயங்களையும் பறிமாற வேண்டிய தேவை ஏற்படலாம். இவ்வாறான தகவல்கள் அதிகாரமற்ற எவரும் பெற முடியா
வண்ணம் பதுகாக்கப்படவும் வேண்டும். இநோக்கத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு
நெறி முறையே https ஆகும்.
இதனை secure http Http எனப்படுகிறது.
பல
நிலைகளில் Http மற்றும் https என்பன
ஒரே மாதிரியாகவே தொழிற்படுகின்றன. காரணம் அடிப்படையில் அவை
ஒரே வகையான நெறி முறைகளாகும்.
Http மற்றும் https க்ளையண்ட்
மென்பொருளான ஒரு வெப் பிரவுசர்,
ஒரு சேவர் கணினியுடன் இணைப்பை
ஏற்படுத்தி அந்த சேர்வரிடம் ஒரு
தகவலை எதிர் பார்த்து நிற்கிறது.
இந்த செய்தியைப் பெறும் அந்த சேர்வர் கணினி தனது
தற்போதைய நிலையை தெரிவிப்பதோடு கூடவே
ஒரு செய்தியையும் பிரவுஸருக்கு அனுப்பி வைக்கிறது. அந்த செய்தியானது பிரவுசர்
எதிர்பார்த்த தகவலாக இருக்கலாம் அல்லது
தகவல் செயற்பாடு முறையாக செயற் படவில்லை
என்ற ஒரு ஒரு பிழைச்
செய்தியாகவோ இருக்கலாம். https பயன்
படுத்தும் போது தரவு மறை
குறியாக்கம் ((encrypted) செய்யப்
பட்ட (SSL Secure Sockets
layer-Digital Certificate) பாதுகாப்பான
ஒரு இணைப்பு அவசியம் என்பதனை
சேர்வருக்கு உணர்த்தி விடுகிறது.
அனூப்