Is the internal memory full in your Android device?

Android கருவி நினைவகம் நிரம்பி விட்டதா?

அன்ரொயிட் கருவிகளில் அதிகளவு அப்லிகேசன்களை நிறுவும் போதும் அதன் உள்ளக நினைவகத்தில் (internal memory) வெற்றிடம் குறைந்து புதிதாக அப்லிகேசன்களை நிறுவுவதற்கோ அல்லது பைல்களை சேமிப்பதற்கோ முடியாமல் போய் விடும்.

இவ்வாறான நிலையில் அண்ட்ரொயிட் கருவிகளில் உள்ளக நினைவகம் மற்றும் மற்றும் SD கார்ட் என்பவற்றில்  காளியிடத்தை பெறுவதற்கான சில வழிமுறைகள். கிழே தரப்படுகின்றன.

1. பொதுவாக உள்ளக நினைவகத்திலேயே எப்லிகேசன்கள் நிறுவப் படுவதோடு SD card இல் பைல்கள் மற்றும்  கேமராவில் எடுக்கப் படும் போட்டோ வீடியோ என்பன சேமிக்கப் படுவதுண்டு. எனவே உள்ளக நினைவகத்திலிருந்து SD card ற்கு அப்லிகேசன்களை நகர்த்துவதன் மூலம். காளியிடத்தைப் பெறலாம். சில அப்லிக்கேசன்கள் உள்ளக நினைவகத்திலிருந்து நகர்த்த முடியாதவாறு உருவாக்கப் பட்டிருக்கும். என்பதையும் நினைவில் கொள்ளவும். எனினும் அவ்வாறான எப்லிகேசன்களையும் நகர்த்துவதற்கு வழியுண்டு. அது சற்று சிக்கலான வழி முறை என்பதால் அதனைப் பற்றி விவரிக்க வில்லை

அப்லிகேசனை நகர்த்துவதற்கு முன்னர் ஒவ்வொரு அப்லிகேசனும் நினைவகத்தில் எவ்வளவு இடத்தைப் பிடித்துள்ளன என்பதை Settings ---   Applications Manager ----  Sort by size ஊடாகத் தெரிந்து கொள்ள முடியும். அதிக இடத்தைப் பிடித்துள்ள எப்லிகேசன் பட்டியலின் மேல் பகுதில் காட்டப்படும்அந்த எப்லிகேசனில் தட்டும் போது அது பற்றிய மேலும் விவரங்களைக் காண்பிக்கும். அங்கு Move to SD card என்பதில் தட்டும் போது உள்ளக நினைவகத்திலிருந்து SD card ற்கு அது நகர்த்தப் படும்.

2. அண்ட்ரொயிடிட் கருவியின் பதுக்கு  Cache நினைவகத்தில்  ஒவ்வொரு எப்லிகேசனும்  சேமித்து வைத்துள்ள  தற்காலிக பைல்களை அழிப்பதன் மூலமும் சிறிதளவு வெற்றிடத்தைப் பெறலாம். அதற்கு மேற் சொன்ன அதே இடத்திற்குச் சென்று  Clear Data என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

3. எண்ட்ரொயிட் கருவியில் காளியிடத்தை உருவாக்க மிகச் சிறந்த வழி எப்லிகேசனை நீக்கி விடுவதாகும். அடிக்கடி பயன் படுத்தாத எப்லிகேசன்கள் ஏதுமிருப்பின் அதனை நீங்கள் விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் கூட கருவியிலிருந்து முற்றாக நீக்கி விடலாம்ஏனெனில்ம் மறுபடி அதனை கூகில் ப்லே ஸ்டோரிலிருந்து இலகுவாக நிறுவிக் கொள்ளலாம்.  

4. போட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றை கருவியிலேயே விட்டு வைக்காமல் அவற்றை அவ்வப்போது கணினியிற்கு மாற்றிவிடுங்கள். அல்லது ட்ரொப்பொக்ஸ், வன் ட்ரிவ், Google+ போன்ற  க்ளவுட் சேர்வர்களுக்கு தானாகவே அப்லோட் ஆகுமாறு செய்து விட்டால் அண்ட்ரொயிட் கருவியிலிருந்து போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்து வெற்றிடத்தைப் பெறலாம்

அனூப்