What is MAC Address?

MAC Address எனறால் என்ன?

MAC  என்பதை Apple Macintosh கணினியாக எண்ணி விடாதீர்கள். Media Access Control Address என்பதன் சுருக்கமே MAC ஆகும். இது ஒரு கணினி வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்தும் ஒரு நிரந்தர இலக்கமாகும். வலையமைப்பில் உள்ள கணினிகளை வேறு படுத்தும் ஐபி முகவரி என்பது தற்காலிகமானது. கணினி வலையமைப்பில் இணையும் போது  மாத்திரம் ஐபி முகவரியானது வழங்கப்படும். இந்த மேக் முகவரி என்பது வலயமைப்பு இடைமுக அட்டையில் அதன் தயாரிப்பு நிறுவனத்தால் அதனைத் தாயாரிக்கும் போதே பதிக்கப்படுகிறது. எனவே இந்த மேக் முகவரியை  ஒருபோதும் மாற்ற முடியாது.


மேலும்  உலகில் பல கோடி கணினி சார் கருவிகள் உள்ளன. ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான மேக் முகவரியைக் கொண்டிருத்தல் அவசியம். எனவே அதற்கேற்றார் போல் ஒரு சாத்தியமான மேக் முகவரி வழங்கும் முறையும் இருத்தல் அவசியம். இதற்காக ஆறு இரண்டு இலக்கம் கொண்ட பதினறும எண் முறைமை பயன் படுத்தப்படுகின்றது. இங்கு ஒவ்வொரு இலக்கமும் (:) கொண்டு பிரிக்கப் படுகிறது.  உதாரணம் 00:0d:83:b1:c0:8e  எனினும் ஒவ்வொரு கணினி வலையமைப்பும் இந்த மேக் முகவரியை இனம் காணக் கூடியதென்பதால் இந்த இலக்கங்களை நினைவில் கொள்ள வேண்டியதில்லை என்பது ஆறுதலான விடயம்.

அனூப்