A useful windows tip

உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்


நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு எவராவது உங்கள் கணியைப் பயன்படுத்தினரா என்பதை அறிந்து கொள்ளும் வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் தரப்பட்டுள்ளது. அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். 


 start   மெனுவில் run தெரிவு செய்து eventvwr.msc என டைப் செய்து ஓகே சொல்லுங்கள்.
அப்போது Event Viewer டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு Application, Security,System. என மூன்று பிரிவுகள் இருக்கக் காணலாம்.  நீங்கள் System  என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது வலப் புறம் நிகழ்வுகளின் பட்டியல் ஒன்று தோன்றும். அந்தப் பட்டியலில் நீங்கள் வீட்டில் இருக்காத ஒரு திகதியையும் நேரத்தையும் தெரிவு செய்யுங்கள். குறிப்பிட்ட அந்த நேரத்தில் உங்கள் கணினி ஓய்வு நிலையில் இருந்திருக்க வேண்டும்.


விண்டோவின் வலப்புறம் Information க்ளிக் செய்ய குறித்த் அந்த நேரத்தில் கணினி இயக்கத்தில் இருந்ததா என்பதை அறிந்து கொள்ளலாம்.  இந்த Information க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் வீட்டில் இல்லாத போது வேறு எவரேனும் கணினியைப் பயன் படுத்தினார்காளா என்பதோடு எவ்வளவு நேரம் பயன் படுத்தினார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

-அனூப்-