How to hide a drive
ட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பது எப்படி?
உங்கள் கணினியில் முக்கியமான ஆவணங்கள் படங்கள் போன்றவற்றைச் சேமித்து வைத்திருகிறீர்கள். அந்த பைலகளை உங்கள் கணினியைப் பயன் படுத்த்க் கூடிய வேறு சிலரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் அல்லது மறைத்து வைக்க வேண்டும். இவ்வாறு பைல்கள மறைத்து வைக்கக கூடிய மூன்றாம் தரப்பு மென்பொருள் கருவிகள் ஏராளம் உள்ளன. எனினும் அவ்வாறான கருவிகள் எதனையும் பயன் படுத்தாது விண்டோஸ் தரும் கமான்ட் ப்ரொம்ட் மூல்மாகவே பைல்களை போல்டர்களை அல்லது முக்கியமான பைல்கள் உளள ட்ரைவை மறைத்து வைக்கலாம். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
முதலில் administrator
ஆக கணினியில் லொகின் செய்து கொள்ளுங்கள். அடுத்து Start-> Run->
cmd
ஊடாக கமான்ட் ப்ரொம்ப்ட் வின்டோவை அடையுங்கள் அங்கு diskpart என டைப் செய்து என்டர் விசையத் தட்டுங்கள். அப்போது DISKPART எனும் ஒரு ப்ரொம்ப்ட் தோன்றும். அங்கு list volume என டைப் செய்ய உங்கள் கணினியிலுள்ள ட்ரைவ்களின். விவரங்களைக் காணலாம். அடுத்து select volume f என டைப் செய்யுங்கள். இங்கு நான் மறைத்து வைக்கப் போவது ட்ரைவ் f என்பதனாலேயே f தெரிவு செய்துள்ளேன். எனவே நீங்கள் விரும்பும் டரைவ் எழுத்தைத் தெரிவு செய்யலாம்.
அடுத்து Diskpart>remove
letter f என டைப் செய்து என்டர் விசையை அழுத் துங்கள். அவ்வளவுதான். இப்போது அந்த ட்ரைவ் மறைக்கப் பட்டு விடும். இப்போது மை கம்பியுட்டர் திறக்கும்போது மறைத்து வைத்த அந்த ட்ரைவைக் காண்பிக்காது. மேலும் கணினி ரீஸ்டார்ட் செய்யப்பட்டதும் மறைக்கப் பட்ட ட்ரைவைக் கண்பிக்கும். எனினும் அதற்குரிய ட்ரைவ் எழுத்தைக் காண்பிக்காது. மறுபடி அந்த ட்ரைவை அணுக வேண்டிய தேவை ஏற்படும் பொது மெற் சொன்ன வழி முறையின் படி Diskpart>select
volume 3 என டைப் செய்து volume 3 தெரிவு செய்யுங்கள். ஏனெனில் இங்கு மறைத்து வைக்கப் பட்டது மூன்றாவது ட்ரைவ் ஆகும். பின்னர் Diskpart>assign
letter f என டைப் செய்து என்டர் செய்ய அந்த டரைவை மறு படி அணுகலாம்.
-அனூப்-