What is Widget?
Widget
என்றால் என்ன?
எண்ட்ரொயிட் கருவிகளில் எப்ஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். இது நாம் பயன் படுத்தும் எப்லிகேசன்களைக் குறிக்கின்றன. அதே எப்ஸ் எனும் டேபின் பக்கத்தில் விட்ஜட்ஸ் எனும் பெயரிலும் ஓர் டேப் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். எனினும் இதனை நீங்கள் மிக அரிதாகவே பயன் படுத்தியிருப்பீர்கள்.
விட்ஜட்ஸ் டேபை தட்டும்போது clock,
weather, calendar, bookmarks போன்ற வற்றிற்கான ஐக்கன்களைப் காண்பிக்கும். எப்ஸ் மற்றும் விட்ஜட்ஸ் என்பன பார்வைக்கு ஒரே மாதிரியாகத் தோற்றமளித்தாலும் இரண்டும் வேறுபட்டவை. எப்லிகேசன்கள் போலன்றி விட்ஜட்டுகள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யப்பட்டு விடும் என்பது இவற்றின் தனிச் சிறப்பு.
What is widget |
சில விட்ஜட்டுகள் எண்ட்ரொயிட் கருவியுடன் இணைந்தே வரும். நாம் பயன் படுத்தும் சில அப்லிகேசன்களுக்கான விஜட்டுகளும் உள்ளன அவை ப்லே ஸ்டோரிலிருந்து அப்லிகேசன்களை நிறுவும் போது எமக்குத் தெரியாமலேயே நிறுவப்பட்டு விடும்..
இந்த விட்ஜட்டுகளை எண்ட்ரொயிட் கருவியின் ஹோம் திரையில் நிறுத்தவும் முடியும். . அதற்கு ஒரு விட்ஜட் ஐக்கன் மீது விரலால் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்போது அதனை நகர்த்தக் கூடியவாறு மேலெழுந்து வருவதோடு ஹோம் திரையையும் காண்பிக்கும். ஹோம் திரையில் விட்ஜட் ஐக்கனை விரும்பிய இடத்தில் விட்டு விரலை தொடுகையிலிருந்து எடுக்க வேண்டும். சில வேளை ஹோம் திரையில் இடமில்லாத போது No room on
this home screen எனும் செய்தியைக் காண்பிக்கும். அப்போது அந்த விஜட்டை இடப்புறமாகவோ அல்லது வலப்புறமாகவோ நகர்த்துவதன் மூலம் நிறுத்தி விடமுடியும்.
அனூப்