Now You Can Edit Your WhatsApp Messages




நீங்கள் தவறு செய்யும் தருணங்களில் அல்லது உங்கள் எண்ணத்தை மாற்றினால், நீங்கள் ப்லரும் ஆவலோடு எதிர் பார்த்திருந்த அனுப்பிய செய்திகளை திருத்தும் வசதியை WhatsApp தற்போது அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் அனுப்பிய செய்தியில் எழுத்துப் பிழைகள் இருப்பதைக் கண்ணுற்றால் அல்லது இன்னும் கூடுதலாக ஏதும் செய்தியை சேர்க்க விரும்பினால் மிக இலகுவாகா அதனை இப்போது செய்து விட முடியும்.

அதற்கு நீங்கள் அனுப்பிய செய்தியின் மீது நீண்ட அழுத்தத்தைப் பிரயோகிக்க வரும் , மெனுவிலிருந்து Edit (திருத்து) என்பதைத் தேர்வு செய்தால் போதும். ஆனால் இந்த வசதியை செய்தியை அனுப்பிய அடுத்த 15 நிமிடங்களுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும்.

திருத்தப்பட்ட செய்திகள் அவற்றுடன் திருத்தப்பட்டதாகக்-edited குறிக்கப்படும், எனவே நீங்கள் செய்தி கிடைக்கப் பெறுபவருக்கு திருத்த வரலாற்றைக் காட்டாமல் திருத்தம் செய்யப் பட்டது என்பதை மட்டும் அறிந்து கொள்வார்கள். எல்லா தனிப்பட்ட செய்திகள், மீடியா கோப்புகள் மற்றும் அழைப்புகளைப் போலவே, உங்கள் செய்திகளும் நீங்கள் செய்யும் திருத்தங்களும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் (end-to-end encryption) மறைக் குறியாக்கம் செய்யப் பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

வாட்ஸ்அப்பில் ஒருவரின் பிறந்த நாள் பற்றிய செய்தியின் படம்.

இந்த வசதி உலகளவில் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது இன்னும் சில நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும்.