ChatGPT ற்குப் போட்டியாகக் களமிறங்கியது கூகுலின் Bard





மிக அண்மையில் அறிமுகமாகி உலக நாடுகள் அனைத்திலும் டெக் ஆரவலர்களிடத்தில் மிக வரவேற்பைப் பெற்ற OpenAI நிறுவனத்தின் ChatGPT எனும் உரையாடல் செயலியிற்கு (Chat Bot-சேட் போட்) நிகராக கூகுல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள AI தொழி நுட்பத்துடன் கூடிய மற்றுமொரு உரையாடல் செயலியே கூகுல் பார்ட் (Google Bard)

கூகுள் பார்ட் இன் வருகை பற்றி முதன் முதலில் பிப்ரவரி 6, 2023 அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் பார்டைப் பயன்படுத்துவதற்கான காத்திருப்புப் பட்டியல் (wait list) சில வரையறுக்கப்பட்ட நாடுகளில் மார்ச் 21, 2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

கூகுள் பார்ட் ஒரு “மிகப் பெரிய மொழி மாதிரி” என அறியப்படுகிறது. இது உரை மற்றும் குறியீட்டின் மிகப்பெரிய தரவுத்தொகுப்பில் பயிற்சியளிக்கப்பட்டது, இது மனிதனைப் போன்ற உரை பதில்களை உருவாக்கப் பயன்படுத்துகிறது.

பார்ட் உரையை பகுப்பாய்வு செய்ய இயந்திர கற்றலைப் பயன்படுத்துகிறது. பின்னர் அது கற்றுக்கொண்டதன் அடிப்படையில் அடுத்த வார்த்தையைக் கணிக்கிறது. இது மனிதர் பேசுவதைப் பிரதிபலிக்கும் வகையில் பார்ட் வார்த்தைகளை ஒன்றாக இணைக்கிறது

பார்டின் பயனர் இடைமுகம் மிகவும் எளிமையானது. திரையின் அடிப்பகுதியில் உள்ள உரை பெட்டியுடன் தொடங்குகிறது. விசைப்பலகை அல்லது குரல் மூலம் பார்டில் அறிவுறுத்தல்களை உள்ளிடலாம்.

ChatGPT மற்றும் Bing Chat போலல்லாமல், பார்ட் நிகழ்நேரத்தில் பதிலை “டைப்” செய்யாது அல்லது பின்னணியில் என்ன செய்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லாது. நீங்கள் அம்புக்குறி ஐகானில் க்லிக் செய்ய பார்ட் முழு பதிலையும் தருகிறது.

பதில் கொடுக்கப்பட்ட பிறகு, கீழே இரண்டு பட்டண்கள் உள்ளன. நீங்கள் பதிலை கட்டைவிரலை மேலே அல்லது கீழ்நோக்கி மதிப்பிடலாம், அதே அறிவுறுத்தலுக்கான பதிலை மீண்டும் உருவாக்கலாம் அல்லது Google தேடலைச் செய்யலாம்.

கூகுல் பார்ட் சற்று தாமதமாக வெளியிடப்பட்டாலும், அதன் பின்னால் உலகின் மிகவும் பிரபலமான தேடுபொறி உள்ளது. இருந்தாலும் ChatGPT உடன் கூகுல் பார்ட் போட்டியிட முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

கூகுல் பார்டினை bard.google.com எனும் இணைய முக வரியில் டெஸ்க்டப் பிரவுசரினூடாக மட்டும் அணுக முடியும். எனினு