Panda USB Vaccine


Panda USB Vaccine  !


பென் ட்ரைவ், சீடி, டீவிடி போன்ற ரிமூவபல் ட்ரைவ்களை கணினியில் இணைத்ததும் என்ன செய்ய வேண்டும் என் பயனரை வினவும் வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு AUTORUN.INF எனும் பைலை விண்டோஸ் பயன் படுத்துகிறது. இந்த ஓட்டோரன் பைல் உரிய ட்ரைவின் ரூட் (root directory) டிரெக்டரியில் சேமிக்கப்படிருக்கும்.

விண்டோஸ் தரும் இந்த் வசதியே தற்போது கணினிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது, இந்த ஓட்டோரன் பைலைப் பயன்படுத்தி கணினியின் இயக்கத்தைப் பாதிக்கச் செய்யும் ஏராளமான வைரஸ் போன்ற மெல்வெயர்களைப் (malware) பரவ விடப்படுகின்றன. இந்த ஓட்டோரன் பைலை மற்றுமொரு ஓட்டோரன் பைல் மூலம் பிரதியீடு செய்து மாற்றி விடும் யுக்தியைப் பயன் படுத்துகிறார்கள். அந்த ஓட்டோரன் பைல் எம்மை அறியாமலேயே மெல்வெயர்களை இயங்க வைக்கிறது. ஏதேனும் ஒரு ரிமூவபல் ட்ரைவை கணினியில் பொருத்தியதுமே மெல்வெயர் தனது செயற்பாட்டை ஆரம்பித்து விடுகிறது. இந்த ஓட்டொரன் பைலினால் பரவும் மெல்வெயர்களுக்கு உதாரணமாக W32/Sality, W32/Virutas போன்ற வேர்ம் எனும் ஒரு வகை வைரஸ்களைக் குறிப்பிடலாம்.

இந்த ஓட்டோரன் பைல் சார்ந்த ஏராளமான மெல்வெயர்கள் தற்போது ஆக்கிரமித்திருப்பதால் இதற்கு தீர்வு தருகிறது Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டி. இது USB / CD / DVD ட்ரைவ் என எதிலிருந்தும் இயங்கும் ஒட்டோரன் பைல்களை முழுமையாக முடக்கி விடுகிறது. அதாவது எந்த ப்ரோக்ரமோ பைலோ தானாக இயங்குவதை நிறுத்தி விடுகிறது. உதாரணமாக USB போர்டில் பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, மெமெரி சிப், MP3 ப்லேயர் போன்ற சாதனங்களை இணைத்ததுமே இந்த வெக்சீன் ஓட்டோரன் பைலைத் திறக்கவோ அழிக்கவோ அல்லது பிரதி செய்யவோ முடியாது செய்து விடும். எனினும் ஏனைய பைல்களை எந்த சிக்கலுமின்றி அணுக அனுமதிக்கும்.
பைல் அளவு 828 கிலோ பைட் கொண்ட இந்த Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டியை www.pandasecurity.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-