எக்சல் விரிதாளை பிறர் மாற்றாமல் பாதுகாக்க
பல பேர் பயன் படுத்தும் ஒரு பொது கணினியில் எம்.எஸ்.எக்சல் மென்பொருளில் நீங்கள் தயாரிக்கும் விரிதாளில் உங்களைத் தவிர வேறு பயனர்கள் மாற்றங்களைச் செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கலாம். அவ்வாறு வேறு பயனர்கள் எக்சல் விரிதாளில் மாற்றங்கள் செய்யாமல் இருக்கப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.
எக்சல் விரிதாளில் சீட் டேப் (sheet tab) ஒன்றின் மீது ரைட் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் மெனுவில் ; Protect Sheet என்பதைத் தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் முதலில் நீங்கள் விரும்பிய ஒரு பாஸ்வர்டை வழங்குங்கள். அடுத்து பிற பயனர்கள் விரிதாளில் மாற்றம் செய்ய அனுமதிக்கும் செயற்பாடுகளை க்ளிக் செய்வதன் மூலம் தெரிவு செய்யுங்கள். எந்தவொரு செயற்பாட்டையும் தெரிவு செய்யாத விடத்து பிற பயனர்களால் விரிதாளைப் பார்வையிட மட்டுமே முடியும்.. அடுத்து மறுபடி பாஸ்வர்டை வழங்கி உறுது செய்து ஓகே செய்து விடுங்கள். அதே விரிதாளில் மறுபடி பாதுகாப்பை இல்லாமல் செய்ய சீட் டேபில் Unprotect Sheet என்பதைக் க்ளிக் செய்து அதே பாஸ்வர்டை வழங்கி தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
Post Comment