Krita - காட்டூன் படங்களை உருவாக்கும் மென்பொருள்

Krita என்பது கார்ட்டூன் படங்களை எளிதாக  உருவாக்கக் கூடிய ஒரு கிராபிக்ஸ் மென்பொருள்.  இந்த மென்பொருளில் உள்ள கருவிகளைப் பயன் படுத்தி  கிராபிக்ஸ் துறையில் புதியவர்களும்  கூட கார்ட்டூன் படங்களை எளிதில் வரையலாம்.




தொழில்முறை கலைப்பணிகளுக்கு நீங்கள் இதைப் பயன்படுத்துவதானால்,  அது பற்றிய ஏராளமான வீடியோ பாடங்கள் யூடியூப்  தளத்தில் உள்ளன. அவற்றைப் பார்வையிட்டு  உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இதனை முறைப்படி கற்பதன் மூலம்  Fiverr,  Freelancing போன்ற தளங்களில் பதிவு செய்து காட்டூன் படங்களை உருவாக்கி  அதன் மூலம் பணமீட்டவும் முடியும்.

இது ஒரு திறந்த மூல மென்பொருள். அதனால் இதனைக் கணினியில்  நிறுவிப் பயன் படுத்த  தொடரிலக்கங்கள் எதுவும், அவசியமில்ல்லை.  ஃபோட்டோஷாப்  போன்ற புகைப்பட எடிட்டிங் வடிவமைப்பு மென்பொருள் மூலம் உருவாக்கப்படும்  PSD கோப்புக்களை.யும் இதன் மூலம் திறக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம். .

ஃபோட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர்  போன்ற மென்பொருள்கள் மூலம் பயன் படுத்துவதை விட  இந்த க்ரிடா மென்பொருள் மிகவும் எளிதானது.

இந்த க்ரீடா மென்பொருளை  www.krita.org தளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்யலாம்.