Difference between CRT and LCD ?


ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?


ஒரு டெஸ்க் டொப் கணினியை வாங்கும்போது நாம் அதிகமாக சிபியூவின் வேகம் ஹாட் டிஸ்க் மற்றும் நினைவகத்தின் கொள்ளளவு பற்றியே அதிகம் கருத்திற் கொள்கிறோம். அவற்றைப் போன்று அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய மற்றுமொரு வன்பொருள் சாதனமே (monitor) மொனிட்டர். மொனிட்டர்கள் கணினியில் நமது செய்ற்பாடுகளை உடனுக்குடன் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. மொனிட்டர்களை Visual Display Unit (VDU) எனவும் அழைக்கப்படும்.

தற்போது இரண்டு வகையானா மொனிட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை CRT மற்றும் LCD மொனிட்டர்களாகும். இந்த இரண்டு வகை மொனிட்டர்களும் சில சாதக பாதகங்களையும். கொண்டுள்ளன. இவை பற்றிச் சிறிது அறிந்து வைத்திருப்பது ஒரு மொனிட்டரை வாங்கும் போது உங்களுக்கு உதவியாக அமையும்.

இன்று வரை அதிகமாக உபயோகத்திலிருந்தது (CRT) சி.ஆர்.டி மொனிட்டர்களே. (தற்போது இதன் பாவனை குறைந்து வருகிறது) சிஆர்டி என்பது தொலைக்காட்சிப் பெட்டிக்குள் இருக்கும் கண்ணாடிக் குழாய் போன்றதே. இதனைக் CATHODE-RAY TUBE எனப்படுகிறது. பொஸ்பர் (phosphor) எனும் இரயானப் பதார்தத்திலான புள்ளிகள் இலத்திரனியல் கதிர் வீச்சின் மூலம் எரிக்கப்படுவதன் காரணமாக உருவாகும் ஒளியினால் அவை காட்சிகளை உருவாக்குகின்றன.

இவ்வகை மொனிட்டர்கள் சிறந்த தெளிவுத்திறன் (resolution) கொண்டவை. அத்தோடு பல் வேறு அளவுகளிலான ரெஸலுயூசனை உருவாக்கக் கூடியவை. மேலும் கிரபிக்ஸ் கலைஞ்ர்கள் எதிர்பார்க்கும் மிக துள்ளியமான நிற வேறுபாடுகளையும் காண்பிக்கக் கூடியவை.

சி.ஆர்.டி மொனிட்டர்களின் குறைபாடாக அதன் அளவு மற்றும் எடையைக் குறிப்பிடலாம். இதன் அளவு பெரிதாக இருப்பதனால் இவை மேசையில் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்ளும். எனினும் சி.ஆர்.டி மொனிட்டர்கள் சிறந்த செயற்திறனை கொண்டிருப்பதுடன் மலிவாகவும் கிடைக்கிறது.
பொதுவாக மடிக் கணினிகளிலேயே பயன் படுத்தப்பட்டு வந்த LCD (Liquid Crystal Display) மொனிட்டர்கள் தற்போது டெஸ்க்டொப் கணினிகளிலும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை Flat Panel Monitor எனவும் அழைக்கப்படும். எல்.சி.டி மொனிட்டர்களின் பாவனை தற்போது அதிகரித்திருப்பதுடன் அவை வேகமாகப் பிரபல்யமடைந்து வருகின்றன.

சி.ஆர்.டி மொனிட்டர்க்ள் போலன்றி அளவில் சிறியதாகவும் எடை குறைந்ததாகவும் இருப்பதே எல்.சி.டி மொனிட்டர்கள் பிரபல்யமடைவதற்கு முக்கிய காரணங்களாகும். சி.ஆர்.டி மொனிட்டரை விட பாதி எடையயே இவை கொண்டுள்ளன, அத்தோடு மெலிதான திரையையும் கொண்டுள்ளன. இவற்றை மேசையில் வைப்பதற்கு அதிக இடம் அவசியமில்லை.. சுவரில் கூட இதனை மாட்டி விடலாம். இவை இயங்குவதற்கு சி.ஆர்.டி யை விட குறைந்தளவு மின் சக்தியையே பயன் படுத்துவதோடு இவை வெளிப்படுத்தும் ரேடியேசன் (Radiation) எனும் கதிர் வீச்சின் அளவும் சீ.ஆர்.டி மொனிட்டர்களை விட குறைவானதே. இவை கண்களுக்கும் பாதிப்பை எற்படுத்துவதில்லை. மாறாகக் குளிர்ச்சியயே தருகிறது.

எவ்வகை மொனிட்டரானாலும் அதன் திரையின் அளவு முக்கிய இடத்தை வகிக்கிறது. திரையின் அளவு பெரிதாக இருப்பின் எழுத்துக்களை இலகுவாக வாசிக்க முடிவதோடு ஒரே நேரத்தில் ஒன்றிக்கு மேற்பட்ட விண்டோக்களையும் திறந்து பணியாற்றலாம். மொனிட்டரின் அளவானது தொலைக் காட்சிப் பெட்டிகளில் போல் திரையின் குறுக்காவே (மூலை விட்டம்) அளவிடப்படும். எனினும் மொனிட்டரின் அளவு அதில் குறிப்பிடப்படிருப்பதுபோல் உண்மையான அளவைக் கொண்டிருக்காது. ஏனெனினில் திரையின் விளிம்பிலுள்ள ப்லாஸ்டிக் சட்டம் திரையின் ஒரு சிறு பகுதியை மறைப்பதே இதற்குக் காரணமாகும்.

மொனிட்டர்களில் முக்கிய இடம் வகிக்கும் மற்றுமொரு காரணி அதன் Resolution எனும் தெளிவுத் திறனாகும். கிடையாகவும் நிலைக் குத்தாகவும் உள்ள பிக்சல்களின் எண்ணிக்கை ஒரு மொனிட்டரின் ரெஸலுயூசன் எனப்படும் சிவப்பு, பச்சை, நீல நிறத்த்திலான மிகவும் சிறிய புள்ளிகளின் சேர்க்கையையே பிக்ஸல் எனப்படுகிறது. Picture Elements என்பதன் சுருக்கமே Pixel. பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது காட்சித் தெளிவும் அதிகமாக இருக்கும். எல்.சி.டி மொனிட்டரில் இந்த பிக்ஸலானது நீர்ப்படிகம். மூலம் உருவாக்கப் படுகிறது.

அனேகர் பொதுவாக 1024x768 பிக்சல் கொண்ட ரெஸலுயூசனையே தமது அன்றாட வேலைகளில் பயன் பfடுத்துவர். சீஆர்டி மொனிட்டர்களில் பல்வேறு அளவுகளில் ரெஸ்லுயூசனை மாற்றியமைக்க முடியும் ஆனால் எல்சிடி மொனிட்டர்களில் ஒரே அளவான ரெசலுயூசனே பேணப்படும்.
சீ.ஆர்.டி மொனிட்டர் வாங்குவதானால் அதிக (Refresh Rate) ரிப்ரெஷ் ரேட் கொண்டதாக இருக்க வேண்டும். இங்கு ரிப்ரெஷ் ரேட் என்பது ஒரு வினாடியில் எத்தனை தடவைகள் காட்சிகள் மாறி மாறி புதிதாக வரையப் படுகின்றன என்பதைக் குறிக்கிறது. குறைந்த ரிப்ரெஸ் ரேட் கொண்ட மொனிட்டர்களில் அதிக நேரம் பணியற்று கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு 17 அங்குள மொனிட்டரில் 75 Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டதாயிருப்பது நல்லது. குறைந்த ரிப்ரெஷ் ரேட் கொண்ட மொனிட்டர்களில் திரையில் காட்சிகள் தோன்றுவதில் சீரறற நிலையைத் (flicker) தோற்றுவிக்கும். எனினும் எல்.சி.டி மொனிட்டர்களில் ப்ளிக்கர் ஏற்படாது. எனவே இவற்றில் ரிப்ரெஷ் ரேட் என்பது முக்கிய விடயமல்ல.

சிஆர்டி மொனிட்டர்களில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் யாதெனில் டொட் பிட்ச் (Dot Pitch) . பொஸ்பர் பதரர்த்தத்திலான ஒரே நிறம் கொண்ட புள்ளிகளுக்கிடையிலான இடை வெளியே டொட் பிட்ச் எனப்படுகிறது. இந்த இடைவெளியானது மில்லிமீட்டரில் அளவிடப்படும். இந்த இடை வெளியின் அளவு குறைவாக இருப்பது சிறந்த காட்சித் தெளிவைத் தரும்.

சிஆர்டி மொனிட்டருடன் ஒப்பிடும்போது எல்சிடி மொனிட்டர்களின் பிரதான குறைபாடாக இருப்பது அதன் மட்டுப் படுத்தப்பட்ட (Viewing Angle) காட்சிக் கோணமாகும்.. சி.ஆர்.டி மொனிட்டரில் எந்த கோணத்தில் பார்வையிட்டாலும் காட்சியில் வேறுபாடு தோன்றாது. எனினும் எல்சி.டி திரையில் நேராகப் பார்க்கும்போது மட்டும் காட்சி சிறப்பாகத் தோன்றும்,. தலையை பக்க வாட்டில் சிறிது நகர்த்தி ஒரு கோணத்தில் பார்க்கும்போது அல்லது தூர நின்று பார்க்கும் போது காட்சி மங்கலாகத் தோன்றும். எனினும் தற்போதைய எல்டிசிடி மொனிட்டர்களில் TFT - Thin Film Transistor எனும் தொழில் நுட்பம் பயன் படுத்தி இந்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. .

சீ.ஆர்.டி மொனிட்டர்கள் எல்.சி.டி மொனிட்டரின் விலையிலும் பாதி விலைக்கே கிடைக்கிறது. எல்சிடி மொனிட்டர்கள் அறிமுகமான காலங்களில் விலை அதிகமாயிருந்த போதும் தற்போது அவற்றின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நமது நாட்டிலும் 15 அங்குள் எல்சிடி மொனிட்டர்களை ரூபா 12, 000 அளவில் வாங்கலாம்.

சி.ஆர்.டி மொனிட்டர்கள் சிறந்த செயற்திறனைக் கொண்டிருந்தாலும் தற்போது எல்.சி.டி மொனிட்டர்களின் பாவனையே அதிகரித்து வருவதால் சி.ஆர்.டி மொனிட்டர்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தியை நிறுத்தி விட்டன என்பது ஒரு கவலையானா விடயமாகும்.

-அனூப்-