Creating a folder using Keyboard


கீபோர்டடில் ஒரு போல்டர் !

வழமையாக ஒரு புதிய போல்டர் உருவாக்குவதற்கு ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் New – Folder தெரிவு செய்வோம். ஆனால் கீபோர்டைப் பயன் படுத்தி ஒரு புதிய போல்டர் உருவாக்க உங்களால் முடியுமா? இதோ அதற்குரிய வழி.


முதலில் ஏதேனும் ஒரு ட்ரைவையோ அல்லது போல்டரையோ திறந்து கொள்ளுங்கள். (டெஸ்க்டொப்பில் உருவாக்க முடியாது) அடுத்து கீபோர்டில் Alt விசையை அழுத்தியவாறே F விசையை அழுத்துங்கள். பின்னர் அந்த விசைகளிலிருந்து கையை எடுத்து மறுபடியும் கீபோர்டில் W விசையையும் F விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது ஒரு புது போல்டர் உருவாவதைக் காணலாம்.

இந்த வழி முறை விண்டோஸ் இயங்கு தளத்தின் எப்பதிப்பிலும் இயங்கும்எனினும் விண்டோஸ் செவன் பதிப்பில் கீபோர்ட் மூலம் ஒரு புதிய போல்டர் உருவாக்க மேலும் ஒரு இலகு வழி தரப்பட்டுள்ளதுசெவன் பதிப்பில் Ctrl + Shift + N விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள்ஒரு புதிய போல்டர் உடனடியாக உருவாகும்.
அனூப்-