Why windows is restarted after installing applications?

மென்பொருள் நிறுவும் போது  restart  ஏன்?

ஏதேனும் புதிய மென்பொருள் ஒன்றை கணினியில் நிறுவும் போது விண்டோஸ் இயங்கு தளம் முதலில் அல்லது இறுதியில் கணினியை ரீஸ்டாட்  செய்யும் படி சொல்லும் அல்லது இயங்கிக் கொண்டிருக்கும்  அனைத்து புரோகிராம்களையும் நிறுத்திவிடுங்கள் என்ற  செய்தியைக் காண்பிக்கும்.  மென்பொருள் நிறுவும் போது விண்டோஸ் இப்படிச் சொல்லி எங்களை எரிச்சலூட்டுவது ஏன்?

எப்போதெல்லாம் ரீஸ்டாட் செய்ய வேண்டி வரும்?

ஒரு மென்பொருளை நிறுவுவதற்குப் பயன்படும் இன்ஸ்டோலர் எனப்படும் செய்நிரல் முறையாக எழுதப் படாமையினால் அல்லது விண்டோஸ் இயங்கு தளத்துடன் அது மிக ஆழமாக ஒன்றிணைக்கப் படுமுகமாக தேவையான சிஸ்டம் பைல்களைப் பிரதி செய்து கொள்வதற்கு வசதியாக ரீஸ்டாட் செய்யும் படி கேட்கிறது.

விண்டோஸ் இயங்கு தளம் DLL (dynamic link library) ஏனும் பைல்களை அடிக்கடி பயன் படுத்துவதோடு அவற்றை ஒன்றிற்கு மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருளகளிடையே பகிர்ந்து கொள்கிறது. புதிதாக ஒரு மென்பொருளை நிறுவும் போது விண்டோஸ் தற்போது பயன் பாட்டிலுல்ள DLL பைல்களை விடுவிக்க வேண்டி வருவதனால் ரீஸ்டாட் செய்ய வேண்டி வரும்.

தற்போது உருவாக்கப் படும் மென்பொருள்கள் பொதுவாக தேவையான அனைத்து DLL  பைல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவை விண்டோஸிலுள்ள DLL பைல்க்ளைப் பிரதீயீடு செய்யாது. எனினும் அந்த எப்லிகேசன்களை நிறுவும்.  இன்ஸ்டோலர்  கணினியை ரீஸ்டாட் செய்ய வைத்து விடுகிறது. .

மேலும் நீங்கள் நிறுவப் போகும் மென்பொருள் தற்போது வேறு எப்லிகேசன்களால் பயன் படுத்தப் பட்டுக் கொன்டிருக்கும் பைல்களின் புதிய பதிப்புகளை நிறுவ வேண்டியுள்ளதெனின் அந்த எப்லிகேசனை நிறுத்த்ச் சொல்லும் அல்லது ரீஸ்டாட் செய்யச் சொல்லும்.

விண்டோஸ் அப்டேட் பைல்கள் தரவிறக்கம் செய்யப் பட்டு நிறுவப் படாத நிலையில் புதிதாக ஒரு அப்லிகேசனை நிறுவ முயலும் போதும் அது தடை பட்டு கணினியை ரீஸ்டாட் செய்யும் படி சொல்லும்.  
நீங்கள் நிறுவ முடயலும் எப்லிகெசன் பிரிதொரு அப்லிக்கேசனிலும்  தனது கட்டளைத் தொகுதி யொன்றை நிறுவ வேண்டி தேவையிருந்தாலும் அது குறித்த அப்லிகேசனை மூடும் படி அல்லது ரீஸ்டாட் செய்யும் படி வேண்டி நிற்கும்?

-அனூப்-