How to set multiple home pages in browsers
வெப்
பிரவுஸரில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை ஆரம்பப் பக்கமாக வரவழைக்க..
இணைய
உலாவியொன்றைத் திறக்கும்போது ஏதேனும் ஒரு பக்கத்தை
முதற் பக்கமாக வரவழைக்கலாம் என்பதை
நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் ஒன்றல்ல ஒன்றுக்கு
மேற்பட்ட தளங்களையும் முதற் பக்கமாக வரவழைக்கலாம்
என்பதை அறிவீர்களா? இங்கு க்ரோம், பயர்பொக்ஸ்,
இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மற்றும் எட்ஜ் ஆகிய
பிரபலமான பிரவுசர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைய எவ்வாறு முதற் பக்கமாக
வரவைப்பது எனப் பார்ப்போம்.
Chrome
க்ரோம்
விண்டோவில் வலது பக்க மேல்
மூலையில் உள்ள மூன்று கிடைக்
கோடுகளுடன் தோன்றும் மெனு பட்டனில் க்ளிக் செய்யுங்கள. வரும்
மெனுவில் Settings தெரிவு செய்யுங்கள். அடுத்து
On startup பகுதியில் Open a specific page or set of pages பட்டனில் Set pages லின்கில் க்ளிக் செய்யுங்கள். அங்கு
தோன்றும் பெட்டியில் Add a new page பட்டனில்
க்ளில் செய்து நீங்கள் ஆரம்ப
பக்கமாக அமைக்க விரும்பும் இணைய
தளத்தின் முகவரியை டைப் செய்யுங்கள். இவ்வாறு
Add a new page பட்டனில் அடுத்தடுத்து க்ளிக் செய்து முகவரிகளை
வழங்கி இறுதியாக ஓகே க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து க்ரோம் பிரவுஸரை மூடி
விட்டு மீண்டும் திறக்கும் போது நீங்கள் வழங்கிய
அனைத்து இணைய தளங்களும் வெவ்வேறு
டேப்களில் திறந்து கொள்வதைக் காணலாம்.
Firefox:
பயர்
பொக்ஸைத் விண்டோவைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து
ஒவ்வொரு டேபாகத் திறந்து நீங்கள்
ஆரம்ப பக்கமாக மாற்ற விரும்பும்
இணைய தளங்களின் முகவரிகளை டைப் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து பயர் பொக்ஸ் விண்டோவில்
வலது புற மேல் மூலையில்
உள்ள மெனு பட்டனில் க்ளிக்
செய்து Options தெரிவு
செய்யுங்கள். (மூன்று கிடைக் கோடுகள்
உள்ள இடம்) அடுத்து General டேபில்
க்ளிக் செய்து When Firefox starts என்பதில் Show my home page என்பது தெரிவு நிலையில்
இருக்க Use Current Pages பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது
Home Page எனும்
பெட்டியில் நீங்கள் இப்போது திறந்திருக்கும்
பக்கங்களின் முகவரிகள் வரக் காணலாம். அடுத்து
பய பொக்ஸை விண்டோவை மூடி
விட்டு மறுபடி
திறந்து கொள்ளுங்கள் நீங்கள் விரும்பும் அனைத்து
பக்கங்களும் ஆரம்பப் பக்கமாக வரக்
காணலாம்.
Internet Explorer
இண்டர்நெட்
எக்ஸ்ப்லோரர் விண்டோவில் Tools மெனுவில்
Internet Options தெரிவு செய்யுங்கள். வரும் டயலொக் பொக்ஸில்
General டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு
Home page எனும் பகுதியில் நீங்கள் விரும்பும் இணைய
தளங்களின் முகவரிகளை ஒன்றின் கீழ் ஒன்றாக
வெவ்வேறு வரிகளில் வழங்கி ஓகே செய்து
இண்டர்நெட் எக்ஸ்ப்லோரரை மூடி விடுங்கள்.
Edge
அண்மையில்
அறிமுகமான விண்டோஸ் 10 பதிப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் புத்தம் புதிய எட்ஜ்
பிரவுசரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை முதற்பக்கமாக வரவழைக்கக் கூடிய வசதியுள்ளது.
எட்ஜ் பிரவுஸர் விண்டோவில் வலது பக்க மேல்
மூலையில் உள்ள மூன்று புள்ளிகளுடன்
கூடிய மெனு பட்டனில் க்ளிக்
செய்யுங்கள். தோன்றும் மெனுவில் Settings தெரிவு
செய்யுங்கள். அங்கு Open with எனும் பகுதியில் A specific page or pages எனுமிடத்தில் Custom தெரிவு செய்து Enter web Address எனும் பகுதியில்
நீங்கள் விரும்பும் இணைய தள முகவரியை
வழங்குங்கள் இவ்வாறு பல முகவரிகளை
எதிரேயுள்ள + குறியீட்டில் க்ளிக் செய்து வழங்கலாம்.
அடுத்து எட்ஜ் பிரவுஸரை மூடி
விட்டு மறுபடி திறக்கும் போது
ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள ஆரம்பப் பக்கமாக வருவதைக்
காணலாம்.
-அனூப்-
Post Comment