Parallel Space

 

Parallel Space

Parallel Space நீங்கள் என்ரொயிட் கையடக்கக் கருவிகளில் நிறுவியுள்ள செயலிகளில் ஒரே நேரத்தில்  ஒரு கணக்கை (user account) மாத்திரமே செயற்படுத்த முடியும். உதாரணமாக ஜிமெயில் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளைத் திறந்து ஒரு கணக்கில் லொக் இன் செய்தால் அக்கணக்கை மாத்திமே பயன் படுத்த முடியும். நீங்கள் அதே சேவைக்கு வேறொரு கணக்கு வைத்திருந்தாலும் அக்கணக்கிறகு உடனடியாக மாறும் வசதி எச்செயலியிலும் தரப்பட வில்லை. அப்படி  மாற வேண்டுமாயின் ஏற்கனவே லொக் இன் (log in) செய்த கணக்கிலிருந்து வெளியேறி (log out) இரண்டாவது கணக்கினுள் லொக்-இன் செய்து பயன் படுத்த வேண்டும்.

இது போன்ற சிக்களுக்குத் தீர்வு தர வந்திருக்கிறது Parellel Space எனும் ஒரு எப்லிகேசன். இதனைப் ப்லே ஸ்டோரிலிருந்து நிறுவிக் கொள்வதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணக்குகளினுள் லொக் இன் செய்து ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இலகுவாக  மாறிப் பயன் பயன் படுத்தக் கூடிய வசதியைப் பெறலாம்.  அதாவது நீங்கள் கருவியில் நிறுயுள்ள எந்த செயலியையும் பிரதி செய்து பயன் படுத்தக் கூடிய வசதியைத் தருகிறது Parellel Space. நீங்களும் ஒரு முறை பயன் படுத்திப்  பாருங்கள்.